தினமும் குவியும் உடல்கள்.. திணறும் அமெரிக்கா.. 42000 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,000 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் லாக்டவுனை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மாநில தலைநகரங்களில் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம் கூடுதல் சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தினார்.

Recommended Video

    டிரம்ப்புக்கு எதிராக போர்கொடி பிடிக்கும் அமெரிக்க மக்கள்

    மூச்சுத்திணறலை ஏற்படுத்தி மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் படுவேகமாக பரவி வருகிறது. இதுவரை 774,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள் கிழமை மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் 30 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.

    U.S. coronavirus deaths top 42,000, Deaths 1,500 so far on Monday

    திங்கள்கிழமை ஒரு நாளில் மட்டும் 1500க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளைக்கு 2000த்துக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் கொரோனாவால் கடந்த வாரம் உயிரிழந்து வந்தனர். அமெரிக்காவில் கடந்த வாரம் புதன்கிழமை ஒரே நாளில் 2,806 பேர் இறந்தனர். சமீபத்திய நாட்களில் இறப்புகளும் குறைந்துவிட்டன.

    கடந்த 24 மணி நேரத்தில் 153 பேரை பரிசோதனை செய்தபின் திங்களன்று மொன்டானா முதல் முறையாக புதிதாகய யாருக்கும் கொரோனா இல்லை என்று அறிவித்துள்ளது.
    சிகாகோ, பாஸ்டன் மற்றும் பிலடெல்பியா ஆகியவை கொரோனா வேகமாக பரவும் புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவாகி வருகின்றன. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் புதிய வகைப்பாடுகளின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக காட்டப்படுகிறது.

    இதனிடையே கொரோனா பரவுவதை மெதுவாக்குவத்ற்காக வல்லுநர்கள் கூறும் ஊரடங்கு நடவடிக்கைகளால். அமெரிக்காவில் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடந்த மாதத்தில் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்து தள்ளப்பட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+