"கண் முழுக்க பயம்.." நடுங்கிய 5 வயது சிறுவனை.. வீட்டு வாசலிலேயே வைத்து செய்த அமெரிக்க அதிகாரிகள்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் குடியேற்ற விதிகள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இதற்கிடையே அங்கு வெறும் 5 வயதே ஆன சிறுவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. 5 வயது சிறுவனைக் கைது செய்வதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது எனப் பலரும் சாடி வருகிறார்கள்.
அமெரிக்காவில் கடந்த ஓராண்டாகவே டிரம்ப் வந்த பிறகு, வெளிநாட்டினர் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள், சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் என இரு தரப்புக்குமே சிக்கல் தான். சில நேரங்களில் அமெரிக்க அதிகாரிகளின் செயல்கள் கடும் விமர்சனங்களையும் சம்பாதிக்கவே செய்கிறது.

5 வயது சிறுவன்
அப்படியொரு சம்பவம் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அங்குப் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த ஐந்து வயதான ஈக்வடார் சிறுவன் லியாம் கோனேஜோ ராமோஸ் என்பவரை, மின்னசோட்டாவில் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். லியாம் மட்டுமின்றி, இரண்டு 17 வயது சிறார்கள் மற்றும் ஒரு 10 வயது சிறார் என மொத்தம் நான்கு குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பியா ஹைட்ஸ் பள்ளி மாவட்ட கண்காணிப்பாளர் ஜீனா ஸ்டென்விக் தெரிவித்தார்.
லியாமும் அவரது தந்தையும் சட்டப்பூர்வமாகப் புகலிடம் கோரி, அதன் பிறகே அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். ஆனாலும், அமெரிக்க குடியேற்றத் துறை அவர்களைக் கைது செய்துள்ளது. இருவரையும் அதிகாரிகள் டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவர்களின் குடும்ப வழக்கறிஞர் மார்க் ப்ரோகோஷ் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நடுங்கிய சிறுவன்
அதில் லியாம் கைது செய்யப்படுகிறார். நீலத் தொப்பி, ஸ்பைடர்மேன் பை அணிந்திருந்த ஐந்து வயதே ஆன அந்தச் சிறுவனைப் பெரிய ஆயுதங்களுடன் குடியேற்ற அதிகாரிகள் சுற்றி நின்றார்கள். அந்தச் சிறுவன் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, மாஸ்க் அணிந்திருந்த குடியேற்ற அதிகாரிகள் லியாமின் தந்தையை பார்கிங்கில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். லியாமின் தாய் வீட்டின் உள்ளே இருந்துள்ளார். லியாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் தாய் வெளியே வர வேண்டும் எனச் சொல்லி மிரட்டியதாகவும் தெரிகிறது.
அதிகாரிகள் மறுப்பு?
இருப்பினும், தனது மனைவி கைது செய்யப்படக்கூடாது என்பதால் அவரை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி லியாமின் தந்தை அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும், மகனின் பாதுகாப்பை உறுதி செய்ய அவரும் வெளியே வந்துவிட்டார். பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், லியோமை பார்த்துக் கொள்ளப் பள்ளி அதிகாரிகள், அண்டை வீட்டினர் என அனைவரும் முன்வந்த போதிலும், அவர்களிடம் லியாமை ஒப்படைக்கக் குடியேற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதிகாரிகள் சிறுவனையும் உடன் அழைத்து சென்றுவிட்டனர்.
விளக்கம்
இது தொடர்பான போட்டோவும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வெறும் 5 வயதே ஆன சிறுவனிடம் அதிகாரிகள் மிக மோசமாக நடந்து கொண்டு இருப்பதாகவும் இதை ஏற்கவே முடியாது என்றும் நெட்டிசன்கள் சாடினர். இது தொடர்பான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், அமெரிக்க ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
அதில் குழந்தையைக் கைது செய்வது குடியேற்ற அதிகாரிகளின் இலக்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லியாமின் தந்தைதான் தனது மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் இதன் காரணமாகவே சிறுவனையும் உடன் அழைத்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. குழந்தையின் பாதுகாப்புக்காக, ஒரு அதிகாரி குழந்தையுடன் இருந்தார் என்றும் மற்றவர்கள் தந்தையைப் பிடித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்?












Click it and Unblock the Notifications