திடீரென வாஷிங்டன் வந்த 'டூம்ஸ்டே விமானம்'! என்ன பயப்படுறியா குமாரு? அடிசறுக்கும் டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் மிகவும் பாதுகாப்பான விமானமாக கருதப்படும் 'டூம்ஸ்டே விமானம்' திடீரென வாஷிங்டன் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு எச்சரிக்கை கொடுத்த கொஞ்ச நேரத்தில் இந்த விமானம் எதற்காக வாஷிங்டன் கொண்டு வரப்பட்டது? டிரம்ப் பயந்துபோய் இருக்கிறாரா? என்கிற கேள்விகளை இது எழுப்பியிருக்கிறது.

வாஷிங்டனில் உள்ள கூட்டு தளமான ஆண்ட்ரூஸுக்கு கடந்த 17ம் தேதி இரவு வந்து சேர்ந்திருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளன. இந்த விமானத்தின் அதிகாரப்பூர்வ பெயர் 'E-4B நைட்வாட்ச்' என்பதாகும்.

US trump Iran

இந்த விமானம், அமெரிக்காவின் அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு அதிகாரிகளைப் பாதுகாக்கவும், அணு ஆயுதப் போரின்போது அரசாங்கத்தை இயங்க வைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கடந்த 17ம் தேதி மாலை லூசியானாவின் பாஸியர் நகரத்திலிருந்து புறப்பட்டு சுமார் 4 மணி நேரம் பயணித்து மேரிலாந்தில் தரையிறங்கியது. இதனை நியூயார்க் போஸ்ட் உறுதி செய்திருக்கிறது.

மொத்தம் 4 'E-4B நைட்வாட்ச்' விமானங்களை அமெரிக்க விமானப்படை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விமானத்திலும் 112 பேர் வரை குழுவாக பயணிக்க முடியும். இது 7,000 மைல்களுக்கு மேல் செல்லும் திறன் கொண்டது. அணு வெடிப்புகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் மின்காந்த விளைவுகளைத் தாங்கும் திறன் கொண்டதாகும். அதேபோல இந்த விமானத்தில் ஏவுகணைகளை ஏவும் வசதிகளும் இருக்கின்றன.

இந்த விமானத்தில் வெப்ப மற்றும் அணு கதிர்வீச்சு தடுப்பு உள்ளது. விமானத்தின் மேற்பரப்பில் 67 செயற்கைக்கோள் டிஷ் மற்றும் ஆண்டெனாக்கள் உள்ளன. இதனை வைத்த, உலகின் எந்த மூலையிலும் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இது தரையிறங்காமல் ஒரு வாரம் வரை காற்றில் பறந்து செயல்பட முடியும். நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியும் இதில் உள்ளது.

சரி இந்த விமானத்தின் வருகை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது? என்று கேள்வி எழலாம். சாதாரண நாட்களில் இந்த விமானம் நகரத்திற்குள் வருகிறது எனில் அதில் எந்த சிக்கலும் இல்லை. அனால் விமானம் வாஷிங்டனுக்குள் நுழைந்த தேதி ஜூன்.17. அன்றைய தினம்தான், ஈரான் அதிபருக்கு எதிராக டிரம்ப் சாவால் விட்டிருந்தார். ஈரான் தலைவரை கொல்ல விருப்பமில்லை. ஆனால் அவர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். எனவே, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று கொக்கரித்திருந்தார்.

பதிலுக்கு ஈரான் தரப்பில், காட்டமான ரீப்ளை வந்தது. எங்களால் சரணடைய முடியாது. உங்களால் ஆனதை பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஈரான் சொல்லிவிட்டது. இது நடந்த கொஞ்ச நேரத்தில்தான் 'E-4B நைட்வாட்ச்' விமானம் வாஷிங்டன்னில் தரையிறங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+