அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம்.. வெள்ளை மாளிகை மீது பறந்த B-2 விமானங்கள்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நேற்றைய தினம் முக்கிய மசோதா ஒன்றில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார். இதனையடுத்து வெள்ளை மாளிகையின் மீது B-2 விமானங்கள் பறந்து சென்றுள்ளன. ஈரான் மீதான தாக்குதலில் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்க ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் விமானங்கள் பறந்திருக்கின்றன.
தற்போது டிரம்புக்கும், மஸ்க்குக்கும் இடையே நடந்து வரும் பஞ்சாயத்துகளுக்கு காரணம் 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் மசோதாதான். இந்த மசோதாவில்தான் டிரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார். கையெழுத்து போடுவதற்கு முன்னர், "அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்று வருகிறது" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த மசோதாவில் சில பாசிட்டிவ் அம்சங்களும், பல நெகட்டிவ் அம்சங்களும் இருக்கின்றன. முதலில் நெகட்டிவ் விஷயங்களை பார்ப்போம். அமெரிக்கா தனது ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியை அதிகரிக்க இந்த மசோதா வழி வகுக்கிறது. அதேபோல, புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதற்கான நிதி ஒதுக்குவதற்கும் இது வழி வகுக்கிறது. இதில் இருக்கும் ஒரே பாசிட்டிவ் அம்சம் என்னவெனில், வரிச் சலுகைகளை நீட்டிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது என்பதுதான்.
இந்த மசோதா சமூக நலத் திட்டங்களில் வெட்டுக்களை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சியினர் (ஜனநாயகக் கட்சியினர்) குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான மருத்துவ உதவித் திட்டத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். கூட்டாட்சி உணவு உதவித் திட்டங்களிலுக்கும் நிதி போதுமான அளவுக்கு கிடைக்காது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் 17 மில்லியன் மக்கள் காப்பீட்டு வசதியை இழக்க நேரிடும் என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விஷயங்களுக்காக மஸ்க் இந்த மசோதாக்களை எதிர்க்கவில்லை. மாறாக, வரிச் சலுகைகளை நீட்டிக்க மசோதா வழிவகுக்கிறது. எனவே, அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்று மஸ்க் எதிர்த்திருக்கிறார்.
மசோதா கையெழுத்திட்டவுடன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க தொடங்கின. வெள்ளை மாளிகையின் பால்கனியில் டிரம்ப்பும் அவரது குடும்படும் நின்றுக்கொண்டிருக்க, B-2 போர் விமானங்கள் மற்றும் F-35, F-22 விமானங்கள் வானில் பறந்தன. மசோதா நிறைவேற்றப்பட்டாலும், இதை வெற்றியாக டிரம்ப் கருதவில்லை. காரணம், "தேசியக் கடன் அதிகரிக்கும் என்ற எதிர்ப்புகளையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது அமெரிக்காவின் தலையில் $3.4 டிரில்லியன் அளவுக்கு கடனை சேர்க்கும்" என்று கூறியுள்ளார்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் மொத்த கடன் 36.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இதனை அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. கடன் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் நிதி நிலைமை மோசமாகி வருகிறது. இப்படியான சூழலை வைத்துக்கொண்டுதான் ஈரான் மீதான போருக்கு அமெரிக்கா சென்றிருக்கிறது. போதாத குறைக்கு உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் ஆயுத உதவியை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications