138 ஆண்டுக்கு பின் பிறந்த முதல் பெண் தேவதை... அதிசய குழந்தையை கொண்டாடி தீர்க்கும் குடும்பம்!
வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிகனில் ஆண்ட்ரூ க்ளார்க் மற்றும் கரோலின் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள அதிசயமாக பார்க்கப்படுகிறது.அப்படி என்னப்பா அதிசயம் என்கிறீர்களா..?
ஆண்ட்ரூவின் பரம்பரையில் ஒரு முறை கூட கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பெண் குழந்தையே பிறக்கவில்லை. சுமார் 138 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குடும்பத்திற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது தான் அதிசயத்திற்கு காரணம்.

அமெரிக்காவின் மிச்சிகனில் ஆண்ட்ரூ க்ளார்க் , கரோலின் தம்பதிக்கு புனித பாட்ரிக் தினமான மார்ச் 17ல் அழகான பெண் குழந்தை பிறந்தது... அதற்கு பெற்றோர் ஆட்ரி என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். ஆண்ட்ரூவின் குடும்பத்தில் 1885 முதல் பெண் வாரிசே கிடையாது என்று சொல்கிறார்கள். ஆட்ரி தான் 138 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த அந்த அதிசய பெண் குழந்தை என்பதால் ஆட்ரி வருகையை அவர்கள் குடும்பமே கொண்டாடி தீர்த்து வருகிறது.
"குட் மார்னிங் அமெரிக்கா" என்ற இணையதளத்திற்கு ஆண்ட்ரூ கிளார்க் அளித்த பேட்டியில் "இது எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது" என கூறினார்.

நம்பவில்லை
கரோலின் கிளார்க் கூறுகையில், " நானும் என் கணவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் டேட்டிங் செய்தபோது, குடும்பக் கதையை முதலில் சென்னார். ஆனால் என்னால் சுத்தமாக நம்பவே முடியவில்லை. நான், 'ஓ, ஒவ்வொரு முறையும் 50-50 வாய்ப்புகள் இருக்கு என்றே கூறினேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று திரும்ப திரும்ப கேட்டேன். அவர் பெண் குழந்தை பிறக்கவில்லை என்றே கூறினார்.
சடப்பூர்வமாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் நேரடி வரிசையில் எங்களுக்கு ஒரு பெண் இல்லை என்பது தெரியவந்தது. அந்தத் தகவலை உறுதிப்படுத்தும்படி நான் என் கணவuன் பெற்றோரிடம் கேட்டேன், அவர்கள், ஆம். எங்கள் குடும்பத்தில் பல வருடங்களாக நேரடியாக பெண் வாரிசு இல்லை என்றார்கள். அவருக்கு மாமாக்கள் மற்றும் உறவினர்கள் இருந்தனர், அவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ளனர், ஆனால் அவரது பரம்பரையில் ஒரு பெண் குழந்தை இல்லை என்பது தெரியவந்தது.

கர்ப்பம்
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை அறிந்ததும், அந்த நேரத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை இருக்கிறதா அல்லது பெண் குழந்தையாக இருக்கிறதா என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. கர்ப்பமாக இருப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தோம், ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைக்காக பிரார்த்தனை செய்தோம். பெண் குழந்தைபிறக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வெளியில் சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருந்தோம். ஆனால் என் கணவரோது பரம்பரையில் மற்றொரு பையனாக இருக்கும் என்றே நினைத்தார். ஆனால் நான் பெண் குழந்தைதான் பிறக்கும் என்று உறுதியாக நம்பினேன்" என்று கரோலின் கிளார்க் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications