அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல்.. ஜனநாயக கட்சிக்கு கலக்கல் மெஜாரிட்டி! டிரம்பிற்கு பெரிய அப்செட்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளியாகி உள்ள மிட் டேர்ம் தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் பைடனுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு நான்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை அதிபர் தேர்தல் நடப்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல அதிபர் தேர்தல் நடந்து இரு ஆண்டுகளுக்குப் பின் இந்த மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெறும்.
புதிய அதிபர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறுவதால், இது ஆட்சியின் மீது மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது என்பதே பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

அமெரிக்கா
இதன் காரணமாக எப்போதுமே அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு இணையாக இந்த மிட் டேர்ம் தேர்தலும் பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் போலவே அமெரிக்கா நாடாளுமன்றத்திலும் செனட் சபை மற்றும் பிரதிநிதிகளின் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இதில் 35 இடங்களுக்கு மிட் டேர்ம் தேர்தல் நடக்கும்.

மிட் டேர்ம் தேர்தல்
435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதில் அனைத்து இடங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். விலைவாசி உயர்வு, பைடன் ஆட்சி மீதான அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வெல்வது சந்தேகம் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டின.

முக்கியம்
அமெரிக்காவில் புதிய சட்டத்தையும் கொண்டு வரப் பிரதிநிதிகளின் சபை, செனட் சபை மற்றும் அதிபரின் ஒப்புதல் தேவை. எதிர்க்கட்சியினருக்கு எதாவது ஒரு இடத்தில் பெரும்பான்மை இருந்தாலும் கூட புதிய சட்டங்களைக் கொண்டு வர விடாமல் அவர்களால் முடக்க முடியும். இதன் காரணமாகவே மிட் டேர்ம் தேர்தல் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு, செனட் சபையில் இரு கட்சிக்கும் 50 இடங்கள் இருந்தன.

மெஜாரிட்டி
துணை அதிபருக்கு இருக்கும் வாக்களிக்கும் உரிமையால் ஆளும் ஜனநாயக கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தது. இந்த மிட் டேர்ம் தேர்தலில் ஜனநாயக கட்சி செனட் சபை பெரும்பான்மை இழக்கும் என்றே கூறினர். இருப்பினும், கருத்துக் கணிப்பைப் பொய்யாக்கும் வகையில் ஜனநாயக கட்சி இதில் மீண்டும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்து உள்ளார்.

குடியரசு கட்சி
அதேநேரம் பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியின் கையே ஓங்கியுள்ளது. மிட்டேர்ம் தேர்தலில் சுமார் ஆறு இடங்களைக் குடியரசு கட்சி கூடுதலாக வென்றுள்ளது. இதன் மூலம் பிரதிநிதிகள் சபையில் அவர்களால் பெரும்பான்மையைப் பெற முடியும். இதுவும் கூட குடியரசு கட்சியினருக்குப் பெரிய வெற்றி எனச் சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் இரு அவைகளிலும் குடியரசு கட்சியினருக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை என்றே சொல்லாம்.

டிரம்ப்
இது முடிவுகள் டிரம்ப்க்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த மிட் டேர்ம் தேர்தலைக் குடியரசு கட்சியில் இருந்து முழுக்க முழுக்க டிரம்ப் தான் எடுத்துச் சென்றார். நாடு முழுக்க பேரணிகளை நடத்தினர். டிரம்ப் அடுத்து வரும் 2022 அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை அவருக்குக் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்செட்
குறிப்பாக டிரம்ப் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்த பல வேட்பாளர்கள் தேர்தலில் வெல்ல முடியவில்லையாம். செனட் சபையில் இப்போது ஜனநாயக கட்சியினருக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், முக்கிய தீர்மானங்களில் இனி அவர்களின் கைகளே ஓங்கும். குறிப்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செலவினங்களில் ஜனநாயக கட்சியினர் தாங்கள் விரும்பும் முடிவுகளை எடுக்கலாம்.











Click it and Unblock the Notifications