வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெத்து காட்டிய அமெரிக்கா! தைவான் விவகாரத்தில் பயந்து பின் வாங்கும் சீனா? இந்தியா பக்கம் திரும்புமா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தைவான் விவகாரத்தில் அமெரிக்கா காட்டிய பிடிப்பு என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Taiwan- China இடையே போர் அபாயம்.. *World

    கடந்த சில நாட்களாகவே சர்வதேச அரசியலில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது தைவான் விவகாரம் தான். அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி அங்குச் சென்றுள்ளது சீனாவுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாகவே நான்சி பெலோசி தைவான் நாட்டில் இருந்த சமயத்திலேயே அவசர அவசரமாகப் போர்ப் பயிற்சியையும் மேற்கொண்டு இருந்தது. இது சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    6 இடங்கள்.. 6 வியூகங்கள்.. ஒரே இரவில் அமெரிக்காவை திக்கி திணற வைத்த சீனா.. டிராகனின் மெகா பதிலடி! 6 இடங்கள்.. 6 வியூகங்கள்.. ஒரே இரவில் அமெரிக்காவை திக்கி திணற வைத்த சீனா.. டிராகனின் மெகா பதிலடி!

     தைவான் விவகாரம்

    தைவான் விவகாரம்

    தைவான் விவகாரத்தில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது போலவே தெரிகிறது. சீனாவும் கூட அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தைக் கடுமையாக எதிர்த்து இருந்தது. இதுபோல அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் இந்தோ-பசிபிக் பகுதியைச் சீனாவுக்கு எதிரான குவாட் நாடுகளின் புதிய போர்க்களமாக மாற்றியுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு தான், தைவான் மீது சீனா போர் தொடுத்தால் ராணுவ ரீதியாக உதவிகளைச் செய்து பாதுகாப்போம் அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டு இருந்தார்.

     போர் பயிற்சி

    போர் பயிற்சி

    நான்சி பெலோசி மேலும் ஒரு படி சென்று, தைவான் மண்ணில் இருந்தே அமெரிக்காவின் பாதுகாப்பு எப்போதுமே தைவானுக்கு இருக்கும் எனக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா தவறான கருத்துகளைப் பரவும் வேலையில் ஈடுபட்டு உள்ளது. நான்சி பெலோசி வருகைக்குத் தைவான் மக்களே எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற கருத்துருவாக்கத்தை போலி ட்விட்டர் கணக்குகள் மூலம் சீனா செய்து வருகிறது. மிகப் பெரிய போர்ப் பயிற்சி ஒன்றையும் மேற்கொண்டது. மேலும், இதற்குத் தக்க பதிலடியும் கொடுக்கப்படும் என எச்சரித்து இருந்தது.

     ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    பெலோசி பயணத்திற்குச் சீனா காட்டிய இந்த எதிர்ப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சீனாவின் இந்த எதிர்ப்பு மற்ற நாடுகள் தைவான் உடன் ராஜதந்திர உறவை மேம்படுத்தும் முன்பு பல முறை சிந்திக்க வைக்கும். ஏனென்றால், அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவைப் போலச் சீனாவின் ராணுவ பலத்தை எதிர்கொள்ளும் திறன் இருக்காது. சீனா உடனான வர்த்தகம் மிக முக்கியம் என்பதால் ஐரோப்பா நிச்சயம் இந்த விவகாரத்தில் தலையிடாது. இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான மோதலின் நடுவே சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் எனத் தெரியும் என்பதால் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இந்த விவகாரத்தில் நிச்சயம் அணிசேரா கொள்கையையே எடுக்கும்.

     அண்டை நாடுகள்

    அண்டை நாடுகள்

    உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குச் சீனா ஆதரவு தெரிவித்து இருந்தது. இதற்கு நன்றிக்கடனாக இந்த விஷயத்தில், பெலோசியை அனுப்பி அமெரிக்கா பதற்றத்தை ஏற்படுத்துவதாகச் சீன ஆதரவு நிலைப்பாட்டை ரஷ்யா எடுத்து உள்ளது. சீனாவிடம் இருந்து அதிக உதவிகளைப் பெறும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

     முக்கிய பிரச்சினை

    முக்கிய பிரச்சினை

    அதேநேரம் இதில் பாதகமான விஷயங்களும் உள்ளன. சீனாவின் இந்த மூர்கத்தனமான நடவடிக்கை என்பது அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள் குறித்து யோசிக்க வைத்துள்ளது. வரும் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்கலாம் என்பதால் முதலீட்டாளர்கள் சீனாவில் இருந்து தங்கள் முதலீடுகளை திரும்ப எடுக்கும் வாய்ப்புகளும் மிக அதிகம்.

     இந்தியா ஜப்பான்

    இந்தியா ஜப்பான்

    அமெரிக்கா தனது ரொனால்ட் ரீகன் கேரியர் ஸ்டிரைக் குரூப் மற்றும் ஆம்பிபியஸ் தாக்குதல் கப்பல் உள்ளிட்டவற்றை பிலிப்பைன்ஸ் கடலில் நிறுத்தி உள்ளது. இதனால் ராணுவ பயிற்சிகளைத் தாண்டி சீனா எதையும் இப்போது செய்துவிடாது. அதேநேரம் உள்நாட்டில் தங்கள் ராணுவ பிம்பத்தைத் தக்க வைக்க வேண்டிய சூழலிலும் சீனா தள்ளப்பட்டு உள்ளது. இதனால், இந்தியா அல்லது ஜப்பான் பக்கம் சீனா திரும்பலாம் என்பதால் நாமும் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டியது அவசியம்!

    English summary
    United States commitment to defend Taiwan: (தைவான் விவகாரத்தில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள்) what will be China's plan to counter US in taiwan issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X