மோடியை சீனாவுடன் நெருங்கவிடாதீங்க.. டிரம்புக்கு அமெரிக்க உளவு பிரிவு மாஜி இயக்குநர் தந்த அட்வைஸ்
வாஷிங்டன்: இந்தியாவை சீனாவுடன் நெருங்க விடக்கூடாது. இந்த விஷயத்தில் அமெரிக்கா கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த நாட்டின் உளவுபிரிவின் முன்னாள் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் வார்னிங் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு நம் நாடு சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கி உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் பரம எதிரிகளாக உள்ளன. இதனால் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்றால் அமெரிக்காவுக்கு, இந்தியாவின் உதவி தேவை. ஆனால் டிரம்பின் வரி விதிப்பு இந்தியா - சீனாவை நட்பாக்கி விடும் என்று அமெரிக்காவின் அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் வெளியுறவு, உளவுப்பிரிவு அதிகாரிகள் வார்னிங் கொடுத்து வருகின்றனர்.
உளவுத்துறை மாஜி இயக்குநர்
இந்நிலையில் தான் அமெரிக்காவின் சிஐஏ எனும் உளவுபிரிவின் முன்னாள் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முக்கிய வார்னிங் விடுத்துள்ளார். இதுபற்றி வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், ‛‛சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கைகோர்த்து நிற்கும் நிலைக்கு நரேந்திர மோடியை நகர்த்துவதற்கு நிறைய முயற்சிகள் தேவை. ஆனால் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை கையாளும் விதம் பிரதமர் மோடியை சீனாவின் ஜி ஜின்பிங்குடன் சேர்த்து விடும்.
இது அமெரிக்காவின் தலைமைக்கு பெரும் கவலையாக இருக்கும். இதனால் இந்த விஷயத்தை அமெரிக்கா செய்யக்கூடாது. பிரதமர் மோடியை சீனாவுடன் நெருங்க விடக்கூடாது. இந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
யார் இந்த வில்லியம் பர்ன்ஸ்
இந்த தகவலை சொல்லி உள்ள வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க உளவுத்துறையின் மாஜி இயக்குநர். இவர் அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 10 ஆண்டுகளாக அமெரிக்க வெளியுறவுத்துறையில் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். நாடுகளின் வெளியுறவு கொள்கைகளை பற்றி ஆய்வு செய்து வரும் ஆரோன் டேவிட் மில்லருடன் நடந்த கலந்துரையாடலின்போது இந்த தகவலை வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார்.
டிரம்ப் மனமாற்றம்
இப்படி, டொனால்ட் டிரம்புக்கு தொடர்ந்து வார்னிங் செல்வதால் தற்போது அவர் நம் நாட்டை விமர்சனம் செய்வதை நிறுத்தி உள்ளார். அவர் மனம் மாறி உள்ளார். பிரதமர் மோடி நல்ல நண்பர், சிறந்த பிரதமர் என்று தொடர்ந்து புகழ்ந்து வருகிறார். இதுதொடர்பாக இன்று தனது ட்ரூத் வலைதளத்தில், ‛‛இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு நிலையானதாக உள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன்'' என்று கூறினார்.
பிரதமர் மோடி தந்த பதில்
இதற்கு டிரம்ப் கூறுகையில், ‛‛இந்தியா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது. இரு நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இந்திய- அமெரிக்கா கூட்டணியில் எல்லையற்ற திறனை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.. இந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க இரு தரப்பும் முயன்று வருகின்றன.
நானும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச ஆவலாக இருக்கிறேன்.. இது இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த மற்றும் வளமான எதிர்காலத்தைத் தரும். இந்தப் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார். இதனால், கடந்த சில வாரங்களாக இந்தியா - அமெரிக்கா இடையே இருந்த மோதல் தணிந்து ஓரளவு சுமூக உறவை நோக்கு செல்கிறதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications