ராணுவத்தில் டிரம்ப் எடுக்க போகும் சர்ச்சை முடிவு! உலகளவில் எதிர்ப்பு கிளம்புமே.. பின்னணி தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ள டிரம்ப் இப்போது தனது நிர்வாகத்தில் உள்ளவர்களைத் தேர்வு செய்து வருகிறார். இதற்கிடையே ராணுவம் தொடர்பாக அவர் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு முடிவை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குச் சர்வதேச அளவிலும் எதிர்ப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்ன முடிவு.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், இப்போது தனது நிர்வாகத்தில் இருப்போரைத் தேர்வு செய்து வருகிறார். பல்வேறு பதவிகளுக்கும் அவர் தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறது.

ராணுவம்: இதற்கிடையே ராணுவம் சார்ந்து டிரம்ப் இப்போது மிக முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க ராணுவத்தில் இருந்து திருநங்கைகள் மொத்தமாக வெளியேற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக இப்போது அந்நாட்டு ஊடகமான டைம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.. அமெரிக்க நாடாளுமன்றத்தால் இது தாமதமாகக் கூடாது என்பதற்காக இதை நிர்வாக உத்தரவாகப் பிறப்பிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது இதை டிரம்ப் மசோதாவாக கொண்டு வந்தால் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். அதேநேரம் நிர்வாக உத்தரவாகக் கொண்டு வரும் போது, நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை. உடனடியாக அதை அமல்படுத்த முடியும்.
திருநங்கைகளுக்குத் தடை: அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி டிரம்பாக பதவியேற்கப் போகிறார். அதிபராகப் பதவியேற்ற உடனேயே அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்குத் தடை விதிக்கும் உத்தரவில் அவர் கையெழுத்திடப் போவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தில் இப்போது 15,000 திருநங்கைகள் பணியாற்றி வருகிறார்கள். இந்த உத்தரவால் அவர்கள் மருத்துவ ரீதியாக ராணுவத்தில் பணியாற்றத் தகுதியில்லை என்று சொல்லி நீக்கப்படுவார்கள்.
மேலும், இந்த உத்தரவால் வரும் காலங்களில் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளால் சேர முடியாத சூழல் ஏற்படும். கடந்த சில காலமாகவே அமெரிக்க ராணுவத்திற்கு புதிய ஆட்களைச் சேர்ப்பதில் சிரமம் நிலவி வரும் நிலையில், இந்த உத்தரவை அதை மேலும் கடினமாகவே மாற்றும்.
டிரம்ப் நிலைப்பாடு: தேர்தலுக்கு முன்பிருந்தே டிரம்ப் இது குறித்து தொடர்ச்சியாக பேசிய வருகிறார். டிரம்ப் இது விவகாரத்தில் கூறுகையில், "ராணுவம் என்பது போருக்குத் தயாராக இருக்க வேண்டும்.. ஆனால், அதில் கவனம் செலுத்தாமல் அமெரிக்க ராணுவம் பன்முகத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்" என்று கூறியிருந்தார்.
அமெரிக்க ராணுவத்தில் கடந்த ம் ஆண்டில் தான் முதல்முறையாகத் திருநங்கைகள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், 2019ல் இதனால் மிகப் பெரியளவில் செலவு ஆவதாகவும் மருத்துவ நடைமுறைகள் இருப்பதாகவும் சொல்லி டிரம்ப் இதற்குத் தடை விதித்தார். மேலும், இதற்கு மேல் ராணுவத்தில் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ முடியாது எனச் சொல்லி தடை விதித்து இருந்தார். அதேநேரம் கடந்த 2021ம் ஆண்டு அதிபராகப் பதவியேற்ற பைடன் அந்த உத்தரவை மாற்றினார்.
சர்வதேச அளவில் எதிர்ப்பு: இதற்கிடையே இப்போது அதிபராகப் பதவியேற்றுள்ள டிரம்ப், மீண்டும் திருநங்கைகளுக்குத் தடை விதிக்க இருக்கிறார். இப்போது பல்வேறு நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் திருநங்கைகளின் உரிமை தொடர்பாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. எனவே, டிரம்பின் இந்த முடிவுக்குச் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு வரும் என்று தெரிகிறது.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications