Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிய விடிய தேடுதல்.. ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தின் பைலைட் மீட்பு! அமெரிக்கா நிம்மதி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதி நவீன போர் விமானங்களில் ஒன்றான எப் 15 ஜெட் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் இருந்த அமெரிக்க விமானிகள் இருவரும் வெளியே குதித்த நிலையில், ஒருவர் பத்திரமாக தப்பினார். மற்றொரு வீரர் ஈரானில் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் ஈரானில் சிக்கிய அந்த வீரரையும் அமெரிக்கா பத்திரமாக மீட்டுள்ளது. இது குறித்து டிரம்பும் பதிவிட்டுள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ஈரான் மீது அதி நவீன ஆயுதங்களை கொண்டு அமெரிக்கா தாக்கி வருகிறது. பதிலுக்கும் ஈரானும் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. அமெரிக்கா நினைத்து பார்க்காத அளவிற்கு ஈரான் நவீன ரக ஆயுதங்களை கொண்டு தாக்கி வருவது டிரம்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

US Rescues Pilot After Iran Downs F-15 Fighter Jet Donald Trump Reacts

எப் 15 ஜெட் விமானம்

இதற்கிடையே, அமெரிக்காவின் அதி நவீன போர் விமானங்களில் ஒன்றான எப் 15 ஜெட் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் இருந்த அமெரிக்க விமானிகள் இருவரும் வெளியே குதித்த நிலையில், ஒருவர் பத்திரமாக தப்பினார். மற்றொரு வீரர் ஈரானில் சிக்கிக் கொண்டார். ஈரானில் சிக்கிக் கொண்ட அந்த அமெரிக்க வீரரை பத்திரமாக பிடிக்க ஈரானும் அமெரிக்காவும் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தின.

எதிரி நாட்டு வீரரை உயிருடன் பிடித்தால் பரிசுத்தொகை தரப்படும் என்றும் ஈரான் அறிவித்தது. இரண்டு நாட்களாக சல்லடை போட்டு தேடி வந்த நிலையில், அந்த அமெரிக்க வீரரை பத்திரமாக மீட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

"நாங்கள் அவரை (அமெரிக்க வீரர்) கண்டுபிடித்துவிட்டோம்! கடந்த சில மணி நேரங்களில், அமெரிக்க ராணுவம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. எங்கள் சிறந்த குழு அதிகாரிகளில் ஒருவரை பாதுகாப்பாக மீட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துணிச்சலான வீரர், ஈரானின் ஆபத்தான மலைப்பகுதிகளில் எதிரி நிலப்பரப்புக்குள் சிக்கியிருந்தார். எங்கள் எதிரிகள் அவரை ஒவ்வொரு மணி நேரத்திலும் மேலும் மேலும் நெருங்கி வந்தனர். எனினும், அமெரிக்க ராணுவ குழு, வீரரின் இருப்பிடத்தை 24 மணி நேரமும் கண்காணித்து, அவரை மீட்க தீவிரமாக திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர்.

ராணுவ வரலாற்றில் முதன்முறையாக

உலகிலேயே மிகவும் ஆபத்தான ஆயுதங்களுடன் பல டஜன் விமானங்களை அமெரிக்க ராணுவம் அனுப்பி, அவரை மீட்டது. அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவர் விரைவில் முழுமையாக குணமடைவார். இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்ட மற்றொரு துணிச்சலான விமானி சம்பவத்தையும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.

அந்த நடவடிக்கையை உடனடியாக அறிவிக்கவில்லை; ஏனெனில் இரண்டாவது மீட்பு நடவடிக்கையை ஆபத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை. அமெரிக்க ராணுவ வரலாற்றில் முதன்முறையாக, எதிரி நிலப்பரப்பின் உள்பகுதியில் தனித்தனியாக இரண்டு அமெரிக்க விமானிகள் மீட்கப்பட்ட நிகழ்வு இதுவேயாகும். நாங்கள் ஒருபோதும் எந்த அமெரிக்க போர் வீரரையும் விட்டுவிட மாட்டோம்.

சக்திவாய்ந்த ராணுவம் எங்களிடமே உள்ளது

ஒரு அமெரிக்கரும் உயிரிழக்காமல் அல்லது காயமடையாமல் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். இது ஈரான் வான்வெளியில் முழுமையான ஆதிக்கத்தையும் மேன்மையையும் அமெரிக்கா கொண்டு இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அனைத்து அமெரிக்கர்களும் பெருமைப்பட வேண்டிய மற்றும் ஒன்றுபட வேண்டிய தருணம்.

உலக வரலாற்றிலேயே மிகச் சிறந்த மற்றும் சக்திவாய்ந்த ராணுவம் எங்களிடமே உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளையும் தனது பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+