"டெத் டிராப்.." அமெரிக்காவில் சத்தமின்றி சீன உளவாளிகள் செய்த காரியம்.. தட்டி தூக்கிய FBI.. பதற்றம்!
பெய்ஜிங்: அமெரிக்காவில் உளவு பார்த்தாக சொல்லி சீன நாட்டினர் இருவரை எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் டெத் டிராப் பேமெண்ட் மூலம் பணத்தை அனுப்பிப் பல உளவுத் தகவல்களைச் சேகரித்தாக சொல்லப்படுகிறது. இவர்களின் கைது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், சீனா இது குறித்து விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. வரிப் போர் தொடங்கி பல்வேறு வகையிலும் இரண்டு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்காவில் உளவு பார்த்தாக சொல்லி இருவர் கைது செய்யப்பட்டனர்.

சீனா சொல்வது என்ன!
இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாகச் சீனா விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இருவரைச் சீன உளவாளிகள் என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனச் சீனா கூறியுள்ளது.. இந்த குறித்துக் கேட்டபோது, இந்த வழக்கின் விவரங்கள் தங்களுக்குத் தெரியாது என்றும், ஆனால் சீன குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் கூறுகையில், "இந்த வழக்கின் விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், 'சீன உளவாளிகள்' என்று சொல்வது தவறு. சீன குடிமக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
பின்னணி
அமெரிக்காவின் ஹாப்பி வேலியைச் சேர்ந்தவர் யுவான்ஸ் சென் (38), அமெரிக்காவின் நிரந்தரக் குடியிருப்பாளரான சென், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை பார்த்ததுள்ளார். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனுக்கு சுற்றுலா விசாவில் வந்தவர் லிரன் ரையன் லாய் (39). இந்த இருவரையும் இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை எஃப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். சீன அரசின் ஏஜெம்டுகளாக இவர்கள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
10 ஆண்டு சிறை
கைது செய்யப்பட்ட இருவரும் சீன உளவுத்துறைக்காக வேலை செய்ய அமெரிக்கக் கடற்படை வீரர்களை அணுகியதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், இருவரும் சீனாவுக்காக அமெரிக்காவில் பல உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
டெத் டிராப்
இவர்கள் வடக்கு கலிபோர்னியாவில் அமெரிக்க உளவுத் தகவல்களைச் சேர்த்துள்ளனர். டெத் டிராப் பேமெண்ட் மூலம் 10 ஆயிரம் டாலரை கொடுத்து அமெரிக்க உளவுத் தகவல்களைச் சேகரித்துள்ளனர். அதாவது சீக்ரெட்டான இடத்தில் ஒருவர் விவரங்களை வைத்துவிடுவார். கொஞ்ச நேரம் கழித்து அந்த பெப்பரை எடுக்கும் உளவாளிகள், அங்குப் பணத்தை வைப்பார்கள். சிறிது நேரம் கழித்து உளவுத் தகவல் கொடுத்தவர் வந்து பணத்தை எடுத்துக் கொள்வார்.
இதுபோல தான் இருவரும் உளவு பார்த்தாக சொல்லப்படுகிறது. இதற்காகவே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறுகையில், "சீன அரசு நமது ராணுவத்தில் ஊடுருவி, நமது தேசியப் பாதுகாப்பைக் குலைக்க முயற்சி எடுத்ததையே இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு பார்த்தாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications