சிக்னலை ஆப் செய்துவிட்டு.. ஈரான் பக்கத்தில் சென்ற அமெரிக்காவின் ராட்சசன்! அடுத்து நடக்கும் பயங்கரம்
வாஷிங்டன்: ஈரானில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது, போராடும் மக்களை ஒடுக்கினால்.. உதவிக்கு அமெரிக்கா வரும் என்றும் கூறியிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலைக்கார ராட்சத கப்பல் ஒன்று, தனது சிக்னலை ஆஃப் செய்துவிட்டு சைலன்டாக ஈரான் பக்கத்தில் நகர்ந்திருக்கிறது. இனி அடுத்து என்ன ஆகுமோ என்கிற அச்சம் மத்திய கிழக்கு முழுவதும் பரவியிருக்கிறது.
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் எனும் போர்க்கப்பல்தான் தற்போது ஈரானுக்கு அருகில் நகர்ந்திருக்கிறது. இந்த கப்பலுடன் மேலும் சில சிறிய போர்க்கப்பல்களும் ஈரான் அருகே சென்றிருக்கின்றன.

அச்சுறுத்தும் கப்பல்
இந்த கப்பலை ஒரே குண்டில் மூழ்கடிக்க முடியும் எனில், அது அணு ஆயுதத்தால் மட்டுமே முடியும். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து, இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இதே கப்பல் ஈரான் அருகே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அப்படி பார்த்தால் இன்று நடப்பது புதிய விஷயம் இல்லை என்றுதான் தோன்றும். ஆனால், இதற்கு முன்னர் இந்த கப்பல் பயணிக்கும் பாதைகள் உலக நாடுகளுக்கு வெளிப்படையாக தெரிந்தது.
இந்திய பெருங்கடலில் பயணம்
இக்கப்பல் தனது சிக்னலை ஆன் செய்து வைத்து பயணித்து வந்தது. ஆனால், தற்போது முதன் முறையாக, சிக்னலை ஆஃப் செய்துவிட்டு இக்கப்பல் இந்திய பெருங்கடலில பயணித்திருக்கிறது. எனவே கப்பல் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே சிரமமான காரியமாக மாறியிருக்கிறது. இந்த ஒரு கப்பலை தனியாக சமாளிப்பதே ரொம்பவும் கஷ்டமான வேலை.
அப்படி இருக்கையில், இந்த கப்பலுடன் மேலும் சில போர்க்கப்பல்களை டிரம்ப் அனுப்பியிருக்கிறார். எனவே மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
90 விமானங்கள்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் கப்பலில் 90க்கும் அதிகமான போர் விமானங்கள் இருக்கின்றன. இதில் அதிநவீன F-35C போர் விமானங்களும் இருக்கிறது. இந்த விமானங்களும், இந்த கப்பலும், உடன் வரும் சிறிய போர்க்கப்பல்களும் நூற்றுக்கணக்கான இலக்குகளை துல்லியமாக ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டவை.
3ம் உலகப்போர்
விஷயம் சீரியஸாக மாறுவதை உணர்ந்த ஈரான், தனது ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டிருக்கிறது. ஒருவேளை அமெரிக்கா எங்களை தாக்கினால், நாங்கள் நடத்தும் பதில் தாக்குதல் ஒரு முழு போரை உருவாக்கும் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications