"ஐயோ!" அப்படியே சரிந்த பல நூறு பயணிகள்! நடுக்கடலில் ஸ்தம்பித்த கப்பல்! உள்ளே புகுந்த அதிகாரிகள்
இப்போது உலகின் பல பகுதிகளிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் சொகுசு கப்பல் ஒன்றில் ஒரே நேரத்தில் திடீரென பல நூறு பேருக்கு மோசமான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு மீண்டும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவிய சமயத்தில் என்ன நடந்தது என்பதை நிச்சயம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். உலகின் வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
எங்குப் பார்த்தாலும் வைரஸ் பாதிப்பாகவே இருந்தது. இதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் ஒட்டுமொத்தமாக முடங்கிப்போனது. இப்போது தான் நாம் வைரஸ் பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டுள்ளோம்.

அமெரிக்கா
கொரோனா வைரஸ் காரணமாக நாம் பல ஆயிரம் பேர் இழந்துள்ளோம். இதனால் உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா வேக்சின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலைமை இப்போது தான் சற்று மேம்பட்டுள்ளது. உலகம் இப்போது தான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இப்போது மீண்டும் ஒரே கப்பலில் பல நூறு பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல நூறு பேர்
அமெரிக்காவின் பிரின்சஸ் குரூஸின் ரூபி பிரின்சஸ் கப்பலின் சமீபத்திய பயணத்தில் 300க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அடையாளம் தெரியாத நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரை டெக்சாஸிலிருந்து மெக்சிகோவுக்கு அந்தக் கப்பல் பயணித்த நிலையில், அப்போது தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,881 பேர் பயணித்த நிலையில், அவர்களில் 284 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பயணிகளில் 10% பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அறிகுறிகள்
அதேபோல கப்பலில் 1,159 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 34 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பணியாளர்களில் சுமார் 3% ஆகும். அனைத்து பயணிகளுக்கும் முக்கிய அறிகுறிகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு. ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கான காரணம் எதுவும் இப்போது தெரியவில்லை என்றும் அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த நோய் பரவலுக்கான சரியான காரணத்தை வல்லுநர்களால் கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கழிவுகள்
எதனால் இப்படி ஒரே நேரத்தில் பல நூறு பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை.. இந்தக் கப்பல் மார்ச் 5ஆம் தேதி டெக்சாஸின் கால்வெஸ்டனில் நிறுத்தப்பட்டது. அப்போது தான் சுகாதார வல்லுநர்கள் கப்பலில் சென்று ஆய்வு செய்தனர். இந்த பாதிப்பு கப்பலில் பரவ தொடங்கியவுடனேயே பணியாளர்கள் கப்பலை அடிக்கடி சுத்தம் செய்யத் தொடங்கினர். மேலும், கிருமிநாசினிகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும், ஆய்வாளர்களுக்காக நோயாளிகளின் கழிவுகளையும் சேகரித்துள்ளனர்.

என்ன காரணம்
பொதுவாகக் கப்பல்களில் இடநெருக்கடி காரணமாக அனைத்துமே நெருக்கமாக இருக்கும். மேலும், சொகுசு கப்பல்களில் காற்றோட்டமும் குறைவாகவே இருக்கும். மேலும், பல நேரங்களில் பொது கழிவறைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சொகுசு கப்பல்களில் ஒருவருக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டாலே கூட அது மிக எளிதாகவும் வேகமாகவும் கப்பலில் இருக்கும் அனைவருக்கும் பரவும்.

முதல்முறை இல்லை
இதே ரூபி இளவரசி கப்பலில் தான் கடந்த காலத்திலும் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2020இல் இதே கப்பலில் தான் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பல நூறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கப்பலில் ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கப்பல்களில் ஏற்படும் கொரோனா பாதிப்பு சிடிசி கண்காணித்தே வந்தது. கடந்த ஜூலை 2022இல் இந்த கண்காணிப்பு முடிவுக்கு வந்தது.
-
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications