"திடீரென வந்த சத்தம்!" ஒவ்வொரு நிமிடமும் ரொம்பவே முக்கியம்.. டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல்! என்னாச்சு
வாஷிங்டன்: டைட்டானிக் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், அதைத் தேடும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது.
Recommended Video
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது. டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அழைத்துச் சென்று வருகிறது.

அந்த நீர்மூழ்கிக் கப்பல் சில நாட்களுக்கு முன்பு, கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தேடும் பணிகள் தான் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.
தேடுதல் வேட்டை: அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் அந்த கப்பலில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும் நிலையில், அதைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலை இப்போது அமெரிக்கக் கடலோர காவல்படை, கனடா நாட்டின் ராணுவ விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் கப்பல்கள், கேமரா பொருத்தப்பட்ட நவீன ரோபோக்கள் ஆகியவை மாயமான டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்களிடம் 10 மணி நேரத்திற்கும் குறைவான ஆக்சிஜன் மட்டுமே இப்போது இருக்கிறது.. இதனால் ஒவ்வொரு நிமிடமும் ரொம்பவே முக்கியம் என்பதால் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய 24 மணி நேரமும் தேடி வருகின்றனர்.
ஆக்சிஜன் & உணவு: எதிர்பாராத அசம்பாவித சம்பவங்களை சமாளிக்கும் வகையில் அவசரக்காலத்தில் 96 மணிநேரம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் வகையில் டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஆக்சிஜன் தான் இப்போது மாயமான சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி வருகிறது. ஆக்சிஜன் மட்டுமின்றி எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்க அங்கே சில உணவுப் பொருட்களும் சேமிக்கப்பட்டுள்ளதாம். இந்த இரண்டையும் வைத்தே அவர்கள் சமாளித்து வருகின்றனர்.
மாயமான இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 5 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் அதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் ஆகியோர் கப்பலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. டைட்டானிக் கப்பலைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்த சோனார் திறனைக் கொண்ட கனடா நாட்டை சேர்ந்த விமானம் ஓர் இடத்தில் ஒலியை பிக் செய்துள்ளது. அந்த இடத்தில் நீர்மூழ்கிக் கப்பல் இருக்கலாம் எனக் கருதி, படகுகளும் கப்பல்களும் அங்கே சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.
உயிருடன் உள்ளனரா: நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளவர்களின் நிலை தெரியாமல் இருக்கும் நிலையில், அவர்கள் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையை இது அளிக்கிறது. இருப்பினும் அவர்கள் உயிருடன் இருப்பதை வல்லுநர்களால் உறுதி செய்ய முடியவில்லை.
இது குறித்து கடலோர காவல்படை கேப்டன் ஜேமி பிரடெரிக் கூறுகையில், "நீங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்றே ஒரு நம்பிக்கை இருக்கும். குறிப்பாக இதுபோன்ற சப்தங்கள் வரும் போது, அவை என்னவென்று நமக்கு தெரியாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த சத்தம் என்னவென்றே நமக்கு தெரியாது.
சில நேரங்களில் தேடுதல் வேட்டையில் நாம் கடினமான முடிவை எடுக்க வேண்டி இருக்கும். இப்போது நாம் அந்த நிலையில் இல்லை. எதுவாக இருந்தாலும் விரைவில் உங்களிடம் கூறுகிறோம். அவர்களைப் பாதுகாப்பாக மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஈடுபட்டுள்ளோம்" என்றார். சில மணி நேரம் மட்டுமே ஆக்சிஜன் இருக்கும் நிலையில், அதை நோக்கியே மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. மீட்புப் படையினர் அளிக்கும் ஒவ்வொரு தகவலும் முக்கியமானதாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை: கடந்த 2018ஆம் ஆண்டிலேயே நீரில் மூழ்கக்கூடிய கப்பலில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக வல்லுநர்கள் கவலை எழுப்பினர். இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குப் பாதுகாப்பானது என்ற சான்றிதழ் வழங்கவே ஓசன்கேட் அமைப்பு தயங்கியதாகவே தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications