"நீங்கியது மர்மம்.." யுஎஃப்ஓக்களில் பறந்து வந்தது ஏலியன்களா? ஒரு வழியாக வாயை திறந்த அமெரிக்கா
அமெரிக்க வானில் நுழைந்தது என்ன என்பது குறித்த வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 3 நாட்களாக 3 மர்மப் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை ஏலியன்களாக இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவின. இதற்கிடையே அமெரிக்க வெள்ளை மாளிகை இது குறித்து விளக்கமளித்துள்ளது.
Recommended Video
அமெரிக்க வானில் நடக்கும் மர்ம சம்பவங்கள் தான் கடந்த சில நாட்களாகச் சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. முதலில் அமெரிக்க வானில் அத்துமீறி நுழைந்த சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள் வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்குத் தொடர்ச்சியாக மூன்று மர்மப் பொருட்களை அமெரிக்கச் சுட்டு வீழ்த்தியது. இரண்டு அமெரிக்காவிலும், ஒன்று கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமெரிக்கா
இவை அனைத்துமே அமெரிக்காவின் வடக்கு பகுதியில் நடந்தவையாகும். இதுபோன்ற சம்பவங்கள் அங்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த மர்மப் பொருட்களில் இருக்கும் பாகங்களை எடுத்து ஆய்வு செய்யும் பணிகளை அமெரிக்க ராணுவம் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களிலும் யுஎஃப்ஓக்களை பார்த்தாக பலரும் கூறியிருந்தனர். இருப்பினும், அப்போது இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது அடுத்தடுத்து யுஎஃப்ஓக்களை அமெரிக்க ராணுவமே சுட்டு வீழ்த்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

யுஎஃப்ஓக்கள்
இந்த யுஎஃப்ஓக்களில் ஏலியன்கள் வந்திருக்கலாம் என்றும் கூட தகவல்கள் பரவின.. ஏலியன்களாக இருக்கலாம் என்பதையும் முற்றிலுமாக நிராகரிக்க முடியாது என்று அமெரிக்க ராணுவ ஜெனரல் க்ளென் வான்ஹெர்க் நேற்று கூறியதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ன பொருள் என்பது குறித்த முக்கிய தகவல்களை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் பகிர்ந்துள்ளார்.

ஏலியன்களா
இது குறித்து கரீன் ஜீன்-பியர் மேலும் கூறுகையில், "வெள்ளை மாளிகையில் இருந்து இது குறித்து நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.. உலகின் பலருக்கும் இந்த விவகாரத்தில் பல கேள்விகளும் கவலைகளும் உள்ளது எனக்குத் தெரியும்.. இதில் ஒன்றை மட்டும் நான் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். தற்போது வரை சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருட்களில் ஏலியன்கள் அல்லது வேற்று கிரகவாசிகள் இருந்த அறிகுறி எதுவும் இல்லை. அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இதை நான் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

சுட்டு வீழ்த்தியது ஏன்
பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருவதால்.. இதை விளக்க வேண்டிய பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, "முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே இந்த பொருட்கள் சுட்டு வீழ்த்த்பட்டன. அவை அமெரிக்க மக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.. மேலும், அதில் இருந்து சிக்னல்கள் எதுவும் செல்லவில்லை. அதில் ஆட்களும் யாரும் இல்லை.

தீவிர ஆய்வு
சுட்டு வீழ்த்தப்பட்ட பறக்கும் பொருட்களின் தன்மை மற்றும் நோக்கத்தைக் கண்டறிய அமெரிக்கா முயன்றுவருகிறது. இந்த மர்மப் பொருட்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யத் தனியாக ஒரு குழுவை அமைத்துள்ளோம். அதிபர் பைடன் உத்தரவின்படி தேசியப் பாதுகாப்பு செயலாளர் ஜேக் சல்லிவன் இதில் நேரடியாகத் தலையிட்டுள்ளார். அமெரிக்க எம்பிக்களுக்கும் இது தொடர்பாக விரைவில் விளக்கமளிக்கப்படும்" என்றார்.

தனிக் குழு
அமெரிக்காவில் வானில் இதுபோல மர்மப் பொருட்கள் கண்டறிவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் பல முறை இதுபோன்ற யுஎஃப்ஓக்களில் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1945ஆம் ஆண்டு முதல் மட்டும் மொத்தம் 400க்கும் யுஎஃப்ஓக்கள் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற யுஎஃப்ஓக்கள் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க பாதுகாப்புப் படை தனியாகவே ஒரு குழுவை அமைத்திருந்தது. அவர்கள் கடந்த சில மாதங்களாகவே பறக்கும் தட்டு குறித்த சம்பவங்களை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications