உலகின் பயங்கரமான உயிரினம்.. சிங்கம், பாம்பு எல்லாம் இல்லை.. "மனிதர்கள்" தான்.! பகீர் ஆய்வு முடிவு
வாஷிங்டன்: உலகிலேயே இப்போது மிகவும் அச்சுறுத்தும் ஒரு உயிரினமாக மனிதர்கள் இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிங்கத்தைக் காட்டிலும் மனிதர்களைக் கண்டால் அனைத்து விலங்குகளும் தெறித்து ஓடுகிறதாம். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாகக் காட்டின் ராஜாவாகச் சிங்கம் தான் அறியப்படும். சிங்கத்தின் கர்ஜனை பல கிலோமீட்டர் தாண்டியும் எதிரொலிப்பதாக இருக்கும். நீண்ட காலமாக உலகின் மிகவும் அஞ்சப்படும் விலங்காகச் சிங்கமே கருதப்படுகிறது. ஆனால் இந்த நிலை இப்போது மாறி உள்ளது.

யானைகள், காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளிட்ட விலங்குகள் இப்போது மிகவும் அஞ்சி ஓடுவது சிங்கத்தைக் கண்டு இல்லையாம். மனிதர்களைக் கண்டு தானாம். இது தொடர்பாகத் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிரேட்டர் க்ரூகர் தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவாரசிய முடிவுகள் கிடைத்துள்ளது.
ஆய்வு: மேற்கத்தியப் பல்கலைக்கழக உயிரியலாளர் பேராசிரியர் லியானா சானெட் தலைமையிலான குழு இந்த ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் மனிதர்களின் குரலைக் கேட்டாலேயே விலங்குகள் இரண்டு மடங்கு வேகமாக ஓடிவிடுவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆய்வுக்காக க்ரூகர் தேசிய பூங்காவில் பல இடங்களில் நீர் அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். அதன் அருகிலேயே கேமராக்களையும் பொருத்தியுள்ளனர்.
விலங்குகள் சரியாக அந்த இடத்திற்கு வரும் போது மனிதர்கள் பேசும் குரல், சிங்கத்தின் கர்ஜனை மற்றும் புலியின் உறுமல்கள் உள்ளிட்ட ஒலிகளை எழுப்பியுள்ளனர். விலங்குகளின் அச்சுறுத்தும் ஒலி, சாதாரண ஒலி என இரண்டையும் அவர்கள் ப்ளே செய்துள்ளனர். மேலும், இந்த ஒலியைக் கேட்டதும் விலங்குகளின் ரியாக்ஷன் என்ன மாதிரி இருக்கிறது என்பதையும் அவர்கள் படம் பிடித்துள்ளனர்.

மனிதர்கள் மோசம்: அதில் ஒட்டகச்சிவிங்கிகள், சிறுத்தைகள், ஹைனாக்கள் அவ்வளவு ஏன் காண்டாமிருகங்கள் கூட மனிதர்கள் குரலைக் கேட்ட உடனேயே தெறித்து ஓடுகிறதாம். குறிப்பாக அந்த காட்டையே கட்டி ஆள்வது என்றால் அது சிங்கங்கள்தான். ஆனால், அந்த சிங்கத்தின் குரலைக் காட்டிலும் மனிதர்களைப் பார்த்து விலங்குகள் அஞ்சி ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த கேமராவில் பதிவாகியுள்ளது. மனிதர்களின் குரலைக் கேட்டதும் 95% விலங்குகள் அந்த இடத்தில் இருந்து தெரித்து ஓடியிருக்கிறது.
இது குறித்து பேராசிரியர் லியானா சானெட் கூறுகையில், "மனிதர்களின் குரலைக் கேட்டதும் விலங்குகளின் ரியாக்ஷனை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. பொதுவாக எப்போதும் சிங்கங்களே பயங்கரமான விலங்காக இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது நாம் சிங்கத்தை விட அச்சுறுத்தும் விலங்குகளாக மாறிவிட்டோம். விலங்குகளை விட உண்மையிலேயே நாம் தான் பயங்கரமானவர்கள் என்பதை இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய காரணம்: இதற்கு ஒரு முக்கிய காரணம்.. உலகில் மற்ற எந்த வேட்டை விலங்குகளை காட்டிலும் மனிதர்கள் தான் அதிகளவில் விலங்குகளைக் கொல்கிறார்கள். துப்பாக்கி போன்ற அதி நவீன கருவிகள் இருப்பதும், வேட்டை நாய்கள் உள்ளிட்ட உதவிகள் மூலம் வேட்டை தொழில்நுட்பத்தில் நாம் மேம்பட்டு இருப்பதே இதற்குக் காரணமாகும்.
எலிகள் கூட மனிதர்களின் சத்தத்தைக் கேட்டால் அதிகம் அச்சப்பட்டுத் தெறித்து ஓடுகிறதாம். இது விலங்கு சங்கிலியில் மனிதர்கள் ஆதிக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே விளக்குகிறது. மனிதர்களின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்தமாக விலங்குகள் சூழலையும் மொத்தமாகப் பாதிக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications