"ட்விட்டருக்கு அழிவில்லை.." உருகிய நிறுவனர்.. கேப்பில் கொளுத்தி போட்ட மஸ்க்.. ஆங்கிரி பேர்ட்ஸ் சண்டை
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் எடுத்து வரும் நடவடிக்கைகள், உலகெங்கும் உள்ள நெட்டிசன்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
டெக் உலகில் தள்ளாடிக் கொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை மாற்றுவதாகச் சொல்லி வாங்கினார் எலான் மஸ்க். அவர் வாங்குவதாக அறிவித்த போதே, பல மாற்றங்களை எதிர்பார்த்தனர்.
அதன்படி அவர் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலே நாளே அவர் சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட டாப் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்தார்.

எலான் மஸ்க்
மேலும், ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளூ டிக் வசதிக்கு மாதம் 8 டாலர் தர வேண்டும் என்றார். இந்த ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் நில்லாமல் அடுத்து அவர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் தொடங்கினார். சுமார் 50% ஊழியர்கள் ஓவர் நைட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டார். குறிப்பாக இந்தியாவில் 70% மேல் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது,.

ஜாக் டோர்சி
இந்த நடவடிக்கைகள் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ட்விட்டர் நிறுவனம் இந்த நிலைக்கு வரக் காரணமே ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி தான் காரணம் எனச் சாடி வருகின்றனர். இதற்கு ஏற்கனவே ஜாக் டோர்சி மனம் திறந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். இருந்த போதிலும் நெட்டிசன்கள் ஆத்திரம் அடங்கியதாகத் தெரியவில்லை. தொடர்ந்து அவர் ஜாக் டோர்சியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நீங்க தான் காரணம்
ஜாக் டோர்சி ப்ளூஸ்கை என்ற புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ள நிலையில், இதன் காரணமாக ட்விட்டரை அவரே அழிக்க முயல்வதாகவும் சிலர் சாடியிருந்தனர். அப்படிதான் ஒருவர், "உங்கள் புதிய செயலி எப்போது வரும். சீக்கிரம் சொல்லுங்கள்.. அதில் வந்து இணைந்து கொள்கிறேன். அப்போது தான் ட்விட்டர் அழிவுக்கு உங்களை என்னால் மன்னிக்க முடியும்" என்று பதிவிட்டு இருந்தார்.

அழிவில்லை
அதற்கு "ட்விட்டருக்கு எப்போதும் அழிவில்லை.." என்று ஜாக் டோர்சி பதில் அளித்துள்ளார். . எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை ஜாக் டோர்சி ஊக்குவித்தார். மேலும், மஸ்கின் நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் ட்விட்டரை வாங்க நிதியுதவி அளித்தார் என்றே கூட சொல்லலாம். இதன் மூலம் டோர்சி இன்னும் கூட ட்விட்டரின் மறைமுக பங்குதாரராக இருந்து வருகிறார்.

இடையில் புகுந்த மஸ்க்
இது ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் எலான் மஸ்க் மற்றும் ஜாக் டோர்சி ஓப்பனாகவே சண்டையிட்டு கொண்டனர். ட்விட்டர் சமீபத்தில் பேர்ட்வாட்ச் (Birdwatch) என்ற புதிய வசதியைக் கொண்டு வந்தது. ட்விட்டரில் அதிகரிக்கும் போலி தகவல்களைக் கையாள இந்த பேர்ட்வாட்ச் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் எலான் மஸ்க் கம்யூனிட்டி நோட்ஸ் (Community Notes) என்று மாற்றிவிட்டார்.

மோசமான பெயர்
இதைக் குறிப்பிட்ட டோர்சி, பேர்ட்வாட்ச் என்ற பெயர் தான் இதற்குச் சரியானதாக இருக்கும் என்றும் அதற்கான பயன்களை அது சரியாக விளக்குவதாகவும் பதிவிட்டார். இதற்குப் பதிலளித்த மஸ்க், பேர்ட்வாட்ச் என்ற பெயர் தன்னை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கு டோர்சி கம்யூனிட்டி நோட்ஸ் என்ற பெயர் தான் நான் கேள்விப்பட்டதிலேயே போரிங் பெயர் என்று நக்கலாகப் பதில் அளித்தார்.

ஆங்கிரி பேர்ட்ஸ்
இதனால் கடுப்பான எலான் மஸ்க், "அனைத்தும் "பறவை" என்ற பெயரில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ட்விட்டரில் இருக்கும் பல பறவைகள் ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றன.. ஆங்கிரி பர்ட்ஸ் போல" என்று பதிவிட்டு உள்ளார். எலான் மஸ்க் என்ன தான் விளக்கம் சொன்னாலும் கூட ட்விட்டரை அவர் நடத்தும் விதத்தைக் கண்டு நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications