"F***k off.!" இன்டர்நெட் கொடுத்து உதவினாரே எலான் மஸ்க்.. கேட்க முடியாத வார்த்தையில் திட்டிய உக்ரைன்!
வாஷிங்டன்: உக்ரைன் போரை அமைதிக்குக் கொண்டு வருவது தொடர்பாக எலான் மஸ்க் கூறியுள்ள கருத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வந்தது. இந்த மோதல் போக்கு இந்தாண்டு போராக மாறியது.
கடந்த கடந்த பிப்.24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கியது. இதைச் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா கூறினாலும் இது போர் என்பதே உலக நாடுகளின் நிலைப்பாடு.

உக்ரைன் போர்
இந்த போர் சுமார் ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் உக்ரைன் மற்றும் ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தப் போர் முதலில் தொடங்கி போது, வெகு விரைவில் போர் முடிந்துவிடும், உக்ரைனை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றிவிடும் என்றே உலக நாடுகள் நினைத்தன. ஆனால், உண்மையில் நடந்தது வேறு. உக்ரைன் வீரர்கள் காட்டிய எதிர்ப்பு என்பது பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து பல நாடுகளும் ராணுவ ஆயுதங்களைத் தர அது உக்ரைனுக்கு பெரியளவில் உதவியது.

ஆர்வம் இல்லை
இதன் காரணமாகவே இப்போது வரை உக்ரைன் வலிமையாகப் போராடி வருகிறது. இதற்கு இடையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்தன. நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடன்பாடு ஏற்பட்டதால் சில நாட்கள் மட்டும் எவ்வித தாக்குதலும் நடக்காமல் இருந்தது. இருப்பினும், சில நாட்களிலேயே அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு சண்டையை மீண்டும் தொடங்கியன. இந்த போரை இப்போது நிறுத்திக் கொண்டால், அது தனக்கு அவமானம் என்று கருதும் ரஷ்யா, போரை நிறுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.

நட்பு
இந்தச் சூழலில் உக்ரைன் போர் தொடர்பாக எலான் மஸ்க்கின் பதிவுக்கு உக்ரைன் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. முன்னதாக இதே எலான் மஸ்க் தான் போர் தொடங்கிய காலத்தில் உக்ரைனுக்கு பெரியளவில் உதவினார். போர் தொடங்கிய உடன் அங்கு இணையச் சேவை முடங்கியது. அப்போது மஸ்க் தான் தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சில காலம் இணையச் சேவை கொடுத்தார். அதன் பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் வீடியோ காலில் எல்லாம் பேசி இருவரும் நட்பு வளர்த்தனர்

பரபர ட்வீட்
சில நாட்களுக்கு முன்பு, உக்ரைன் போருக்கான தீர்வு என்று சொல்லி எலான் மஸ்க் சில ஆப்ஷன்களை முன்வைத்து இருந்தார். 1.ஐநா மேற்பார்வையில் இணைக்கப்பட்ட பிராந்தியங்களில் தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் எதிர்த்தால் ரஷ்யா வெளியேற வேண்டும். 2.கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது. 3.கிரிமியாவிற்கு நீர் வழங்குவதை உறுதி செய்வது. 4.உக்ரைன் நடுநிலை வகிக்கிறது.

கோபம்
இது தான் உக்ரைன் போருக்குத் தான் முன்வைக்கும் தீர்வு என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். மேலும், போரை முடிக்கவில்லை என்றால் லட்சக் கணக்கான மக்களை நாம் இழக்க வேண்டி இருக்கும் என்றும் இப்போது நடக்கும் இந்தப் போர் அணு ஆயுத போருக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்து இருந்தார். ஏற்கனவே, போரால் உக்ரைன் மக்கள் கோபமாக உள்ள நிலையில், மஸ்கின் இந்த ட்வீட் அவர்களைப் பத்திரப்படுத்தியது.

பதிலடி
குறிப்பாக கிரிமியா தொடர்பான மஸ்கின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மக்களிடம் மற்றொரு கேள்வியைக் கேட்டார். அதாவது மக்களுக்கு உக்ரைன் ஆதரவு எலான் மஸ்க்கை பிடிக்குமா அல்லது ரஷ்ய ஆதரவு எலான் மஸ்க்கை பிடிக்குமா என்ற ரீதியில் கேள்வி கேட்டு இருந்தார். உக்ரைன் மக்களும் கிட்டதட்ட இதே கருத்தைக் கூறி இருந்தனர்.

ஆணு ஆயுதங்கள்
எஸ்கிற்கு பதிலடி கொடுத்த உக்ரைன் துணை அதிபர் மைக்கைலோ போடோல்யாக், "இதைவிட ஒரு சிறந்த அமைதித் திட்டம் உள்ளது. 1. உக்ரைனிடம் இருந்து ரஷ்யா பிடுங்கிக் கொண்ட கிரிமியா உட்பட அனைத்து பிராந்தியங்களையும் விடுவிப்பது 2. ரஷ்யா ராணுவ பலத்தைக் குறைத்து அணு ஆயுதங்களை அழிப்பது 3. போர்க்குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றங்களின் முன் நிறுத்துவது" என்று மூன்று தீர்வுகளைப் பதிலடியாகக் கொடுத்து இருந்தார்.

கெட்ட வார்த்தை
அதேபோல ஜெர்மனிக்கான உக்ரைன் தூததரும் எலான் மஸ்கிற்கு கடுமையான பதிலடி கொடுத்து உள்ளார். மேலும், ஜெர்மனி தூதர் ஆண்ட்ரி மெல்னிக், "F**k off என்பது தான் உங்களுக்கு நான் தரும் மரியாதைக்குரிய பதில்.. இனிமேல் நிச்சயமாக எந்தவொரு உக்ரைன் குடிமகனும் உங்கள் உடைந்த டெஸ்லா காரை வாங்க மாட்டார்கள். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டு உள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications