உலகம் அழியும் தேதி இதுதான்.. அடித்து சொல்லும் பாபா வங்கா- பகீர் கணிப்பு! இது என்ன அப்படியே நடக்குது
வாஷிங்டன்: நம்மில் அனைவருக்கும் வரும் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால், அதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் பாபா வங்கா என்ற பெண்ணுக்கு வரும் காலத்தைப் பார்க்கக் கூடிய ஆற்றல் இருந்ததாக நம்பப்படுகிறது. அவர் பூமியில் வரும் காலத்தில் என்ன நடக்கும்.. பூமி எப்போது அழியும் என்பது குறித்துக் கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
பாபா வங்கா என்றும் அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவாவுக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது. சிறு வயதில் மின்னல் தாக்கியதில் பாபா வங்கா தனது கண் பார்வையை இழந்தார். இருப்பினும், அவருக்கு அப்போது தான் எதிர்காலத்தைப் பார்க்கும் ஆற்றல் கிடைத்ததாக நம்பப்படுகிறது.

பாபா வங்கா: பல்கேரிய நாட்டை சேர்ந்த இவர் 1996இல் தனது 85 வயதில் உயிரிழந்தார்.. இருப்பினும், அதற்கு முன்பே அவர் வரும் காலங்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த துல்லியமான கணிப்புகளை மேற்கொண்டுள்ளார். உலகெங்கும் உள்ள அவரது ஆதரவாளர்கள் அவரை தீர்க்கதரிசி என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தளவுக்கு அவரால் துல்லியமாக எதிர்காலத்தைக் கணிக்க முடிந்துள்ளது.
இவர் பல விஷயங்களை இதற்கு முன்பும் துல்லியமாகக் கணித்துள்ளார். அதில் முக்கியமானது நியூயார்க்கில் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலாகும். இந்த தாக்குதல் நடக்கும் முன்பே அவர், "இரண்டு உலோகப் பறவைகள் நம் அமெரிக்கச் சகோதரர்கள் மீது மோதும்.. ஓநாய்கள் புதர்களில் இருந்து ஊளையிடும்.. அப்பாவிகளின் ரத்தம் ஆறுகளாக ஓடும்" என்று பதிவிட்டிருந்தார். அவர் சொன்னது போலவே தான் தாக்குதல் நடந்தது.
துல்லியமான கணிப்புகள்: இது தவிர செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கூட இவர் துல்லியமாகக் கணித்திருந்தார். இதன் காரணமாகவே இவரது கணிப்புகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோல இவர் வரும் ஆண்டுகளுக்கும் சேர்த்தே கணிப்புகளைச் செய்துள்ளார். குறிப்பாக இந்த உலகம் எப்போது அழியும் என்பதையும் அவர் கணித்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
பலரும் காலத்திற்கு அவர் செய்த கணிப்புகள் குறித்துப் பார்க்கலாம்:
2025: ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் நடக்கும். இதனால் ஐரோப்பிய கண்டத்தின் மக்கள்தொகையில் கணிசமாகக் குறையும்.
2028: மனிதர்கள் வீனஸ் கிரகத்திற்கு அடைவார்கள். புதிய முறையில் ஆற்றல் தயார் செய்வது குறித்து தீவிர முயற்சியில் இறங்குவார்கள்.
2033: பூமியின் இரு துருவங்களிலும் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் குறிப்பிடத்தக்க உயரும்.
2076: உலகம் கம்யூனிசம் பக்கம் திரும்பும்
.
2130: வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படும்.
2170: உலகளாவிய மிகக் கடுமையான ஒரு வறட்சி ஏற்படும்.
3005: செவ்வாய்க் கிரகத்தில் ஒரு போர் நடக்கும்.
3797: பூமியின் அழிவு தொடங்கும். அதேநேரம் மனிதக்குலம் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்றொரு கிரகத்திற்குச் செல்ல திறன் கொண்டதாக மாறும்
5079: உலகம் அழியும்.
இதுவரை பாபா வங்கா விட்டுச் சென்ற பல கணிப்புகள் நடந்துள்ள நிலையில், வரும் காலத்தில் அது நடக்கலாம் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications