அமெரிக்க வன்முறை... வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளர் ராஜினாமா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கேபிட்டல் கட்டட வளாகத்திற்குள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்தபோது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறைக்கு மத்தியில் வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டிரம்ப் பிடிவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் வெற்றி பெற்றார். வருகிற 20-ந்தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப், ஜோ பிடன் வெற்றி வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

வெற்றியை உறுதி செய்யும் பணி
இந்த நிலையில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. தேர்தல் சபை வாக்குகளை எண்ணி முறைப்படி வெற்றிச் சான்றை வழங்குவதற்காக, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் தொடங்கியது.

4 பேர் சாவு
அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பின்னர் பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மீண்டும் பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது.

அதிரடி ராஜினாமா
இந்த நிலையில் இந்த வன்முறைக்கு மத்தியில் வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் முன்னாள் வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநரும், பத்திரிகை செயலாளரும், மெலனியா டிரம்பிற்கான தற்போதைய தலைமைத் தலைவருமான ஸ்டீபனி கிரிஷமும் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

மன உளைச்சலுக்கு ஆளானேன்
இது குறித்து சாரா மேத்யூஸ் கூறியதாவது:- டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன், நாங்கள் இயற்றிய கொள்கைகள் குறித்து பெருமைப்படுகிறேன். இன்று நடந்த சம்பவத்தை கண்டு நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நமது தேசத்திற்கு அமைதியான அதிகார பரிமாற்றம் தேவை என்று அவர் கூறினார். வெள்ளை மாளிகையின் சமூக செயலாளர் அன்னா கிறிஸ்டினா ரிக்கி" நிசெட்டாவும் ராஜினாமா செய்தார் என்று சி.என்.என். செய்தி வெளியிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications