அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தல் ஏன்? யாரெல்லாம் தப்ப முடியும்? அது என்ன "டாங்கி ரோடு"?
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்த 1.4 மில்லியன் பேர் (14 லட்சம்) நாடு கடத்தப்படுவதற்கான அபாயத்தில் உள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் அரசு, சட்ட விரோத குடியேற்றத்தைக் கண்டித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாக, சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் அனைவர் மீதும் நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் எல்லோருக்கும் குடியுரிமை தர அமெரிக்காவால் முடியாது. எனவே அதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறும் மக்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்தும் இருக்கிறார்கள்.

இதற்காக ஏஜென்டுகளிடம் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்து, அவர்கள் சொல்லும் பாதையில் பயணித்து அமெரிக்காவிற்குள் புகுந்து விடுகிறார்கள். இது கடுமையான காட்டு வழிப்பாதையாகும். இங்கு பயணிக்க போதை மருந்து மாஃபியாக்களுக்கு 'பாதுகாப்பு' கட்டணம் என்ற பெயரிலும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதாம். பயணத்தின் போது நடுக்காட்டில் அழகான பெண்களை கண்டால் அவர்களை பலாத்காரம் செய்வதும் நடக்கிறது. பணம் தராதவர்கள் கொல்லப்படுவார்கள். பல கிலோ மீட்டர் தூரம் கடுமையான வனப் பகுதி வழியாக நடந்து அமெரிக்க எல்லையை அடைய வேண்டும். துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடித்த, Comrade in America என்ற திரைப்படம் இதை நன்கு காட்சிப்படுத்தியிருக்கம். தேவையெனில் ஒருமுறை பார்த்துக்கொள்ளலாம். இந்த கடினமான பாதையை வட இந்திய மக்கள் பரவலாக 'Donkey Road' என்று அழைக்கிறார்கள்.

நாடு கடத்தல் எப்படி செயல்படுகிறது?
அமெரிக்காவின் Immigration and Customs Enforcement (ICE) அமைப்பு, சட்டவிரோத குடியேற்றத்தைக் கண்டறிந்து நாடு கடத்தும் பணியை மேற்கொள்கிறது.
சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் முதலில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்படுவார்கள்.
அவர்கள் தடுப்பு மையங்களில் வைக்கப்படுவார்கள்.
பிறகு, நாட்டு கடத்தல் நீதிமன்றம் முன் ஆஜராக்கப்பட்டு, அசைலம் (தஞ்சம்) கோர முடியுமா என்று ஆய்வு செய்யப்படும்.
நீதிமன்றம், கோரிக்கையை நிராகரித்தால், அவர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.
சிலர் தங்களின் செலவினத்தில் நாடு திரும்புவதற்கான 'வாலன்டரி டிபார்ச்சர்' (voluntary departure) தேர்வு செய்யலாம். மற்றவர்களுக்கு விசாரணை இன்றி 'எக்ஸ்பிடைடட் ரிமூவல்' (expedited removal) முறையில் நாடு கடத்தப்படுவார்கள்.
நாடு கடத்தப்படாதவர்கள் யார்?
சில சட்டவிரோத குடியேறிகள் அடைக்கலம் கோரி (asylum) தஞ்சம் பெறலாம், ஆனால் இது மிகக் குறைந்த அளவில் மட்டுமே அனுமதிக்கப்படும். Temporary Protected Status (TPS) மூலம் சிலர் அமெரிக்காவில் தங்க அனுமதி பெறலாம், ஆனால் இது மிகவும் சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. Deferred Action for Childhood Arrivals (DACA) என்ற திட்டத்தின் மூலம், சில குழந்தைகளுடன் அமெரிக்காவிற்குள் புகுந்தவர்கள் தற்காலிகமாக நாடு கடத்தப்படாமல் தங்கலாம்.
இந்தியர்கள் மீது தாக்கம்
1.44 மில்லியன் பேர் ICE-யின் 'நாடு கடத்தல் உத்தரவுடன் காத்திருக்கும் பட்டியலில்' உள்ளனர். இதில் 18,000 பேர் இந்தியர்களும், 38,000 பேர் சீனாவிலும் இருந்து வந்தவர்கள். மேலும் ஹொண்டுராஸ், குவாடிமாலா, எல் சால்வடோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளைச் சேர்ந்த 200,000 பேர் இதில் அடங்குகின்றனர்.
இந்திய அரசு என்ன சொல்கிறது?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "கடந்த நாடுகளில் குடியேற்ற விதிகளை மீறினால், இந்தியர்கள் நாடு கடத்தப்படுவார்கள். இதனைத் தடுக்க இந்திய தூதரகம் உதவ முடியாது" என்று விளக்கியுள்ளது. சட்டப்படி தவறு செய்யாமல் இருந்தும் நாடு கடத்தப்படுவதாக நம்பினால், அவர்களால் இந்திய தூதரகத்திடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்திலும் பரபரப்பு
அமெரிக்க ராணுவ விமானம் மூலம் 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் போல கை விலங்குடன், காலில் சங்கிலியுடன், விமானத்தில் தூக்கி வீசப்பட்டு இந்தியா அனுப்பப்பட்ட செய்திகள் புகைப்படங்களுடன் வெளிவந்தது. இந்த விவகாரம் இந்திய பாராளுமன்றத்திலும் இன்று புயலை கிளப்பியது. "இந்தியர்களை இழிவாக நடத்துகிறார்கள்" என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்தபோது, "சட்டப்பூர்வமான குடியேற்றத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும். உலக நாடுகளின் கடமையே, சட்டவிரோத குடியேற்றங்களை திருப்பி அனுப்புவது" என்று கூறினார். அமெரிக்க கனவு பலருக்கு துயர கனவாக மாறி வருகிறது. சட்ட வழியில் குடியேறுபவர்களுக்கு மட்டுமே உறுதியான எதிர்காலம் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, வழிமுறைகளை சரியாக பின்பற்றி, சட்டப்படி வெளிநாடுகளில் வாழ்வதே சிறந்தது.
-
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்!












Click it and Unblock the Notifications