அர்ஜெண்டினாவ விடுங்க.. 21 ஆண்டு கழித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெண்! யார் இந்த சர்காம் கவுசல்?
வாஷிங்டன்: மிஸ்ஸஸ் வேர்ல்டு எனப்படும் திருமணமான பெண்களுக்கான உலக அழகி போட்டியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பெண்ணான சர்காம் கவுசல் வெற்றி பெற்று உள்ளார். யார் அவர்? விரிவாக பார்ப்போம்.
நேற்று கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் அர்ஜெண்டினாவுக்கு மெஸ்ஸியும் அவரது அணியும் உலகக்கோப்பையை வென்று கொடுத்து இருப்பதை பலரும் பேசி வருகிறார்கள்.
அதே நாளில் அமெரிக்காவில் ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக சேர்ந்த பெண் ஒருவர் 21 ஆண்டுகளாக இந்தியாவால் பெற முடியாத பட்டத்தை வென்று சாதித்து இருக்கிறார். அவர் பெயர்தான் சர்காம் கவுசல்.

2022ன் மிஸ்ஸஸ் வேர்ல்டாக இந்தியர்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மிஸ்ஸஸ் வேர்ல்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 63 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த சர்காம் கவுசல் வெற்றிபெற்று மிஸ்ஸஸ் வேர்ல்டாக தேர்வு செயப்பட்டார். அவருக்கு மிஸ்ஸஸ் வேர்ல்டு 2021 பட்டம் வென்ற சய்லின் போர்டு மகுடம் சூட்டினார்.

21 ஆண்டுக்கு பின் வெற்றி
இதில் 2 வது இடத்தை பாலினேசியாவை சேர்ந்த அழகியும், மூன்றாவது இடத்தை கனடா நாட்டை சேர்ந்த அழகியும் வென்றனர். 21 ஆண்டுகளுக்கு பின் மிஸ்ஸஸ் வேர்ல்டு பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றார். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த அதிதி கோவிதிரிகர் இந்த பட்டத்தை வென்றார். மருத்துவரான அவர், மிஸ்ஸஸ் வேர்ல்டு பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெறுமையை பெற்றார்.

மிஸ்ஸஸ் இந்தியா
இந்திய அளவிலும் திருமணமான பெண்களுக்காக மிஸ்ஸஸ் இந்தியா என்ற அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ்ஸஸ் இந்தியா அழகிப் போட்டியில் அதிதி கோவிதிரிகர் நடுவராக இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மிஸ்ஸஸ் இந்தியா போட்டியில் 51 போட்டியாளர்களில் வெற்றியாளராக சர்காம் கவுசல் தேர்வு செய்யப்பட்டார்.

யார் இந்த சர்தாம் கவுசல்?
சர்தாம் கவுசலின் பூர்வீகம் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தது. ஆனால், அவர் மும்பையில் வசித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற சர்காம் கவுசல், அதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். இவரது கணவர் இந்திய கடற்படையில் பணிபுரிந்து வருகிறார்.

உணர்ச்சிகர பேச்சு
இந்த வெற்றி குறித்து சர்காம் கவுசல் தெரிவிக்கையில், "மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. 21-21 ஆண்டுகளுக்கு பிறகு இதனை நாம் வென்றுள்ளேன். இந்தியாவுக்கும், உலகிற்கும் எனது அன்பை தெரிவிக்கிறேன்." என்றார். இதுகுறித்து முன்னாள் மிஸ்ஸஸ் வேர்ல்டு அதிதி கூறுகையில், "கவுசலுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். இதில் மிஸ்ஸஸ் இந்தியா ஒரு பகுதியாக இருந்ததை நினைத்து மகிழ்கிறேன். 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு இப்பட்டம் கிடைத்துள்ளது." என்றார்.

மிஸ்ஸஸ் வேர்ல்டு போட்டி
மிஸ் வோர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் என உலக பிரபலமான அழகி போட்டிகள் ஆண்டுதோறும் திருமணம் செய்யாத இளம் பெண்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் திருமணம் செய்த பெண்களுக்காக சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிஸ்ஸஸ் வேர்ல்டு என்ற பெயரில் உலக அழகி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அடித்தளம் போட்ட அமெரிக்கா
1970 களுக்கு முன்பிருந்தே அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கான உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. அந்த வழிமுறையை பின்பற்றி உலக அளவில் திருமணமான பெண்களுக்கான மிஸ்ஸஸ் வேர்ல்டு போட்டிகள் நடைபெற தொடங்கின. 1984 ஆம் ஆண்டு இந்த போட்டி தொடங்கப்பட்டபோது அதன் பெயர் மிஸ்ஸஸ் வுமன் ஆஃப் தி வேர்ல்டு (Mrs Woman of the World) என்பதாகும். பெயரும், பட்டமும் பெரிதாக இருந்த காரணத்தால் 1988 ஆம் ஆண்டு இதன் பெயர் மிஸ்ஸஸ் வேர்ல்டு என்று சுருக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஆதிக்கம்
அன்றிலிருந்து இந்த பெயருடனே இப்போட்டியும், அதில் வெற்றிபெறும் போட்டியாளர்களும் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த போட்டியில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்று வருகிறார்கள். இதில் அதிக வெற்றிகளை பெற்றது அமெரிக்காவை சேர்ந்த பெண்கள்தான். இதில் இந்தியாவை பொறுத்தவரை
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications