கொசுக்கள் ஏன் மனிதர்களை அதிகம் கடிக்கின்றன தெரியுமா? மர்மம் உடைத்த அமெரிக்க ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: மனிதர்களை அதிகளவில் கொசு கடிப்பதற்கான காரணத்தை அமெரிக்காவை சேர்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
கொசுக்கடி வாங்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுந்தால் ஆம் என்று சொல்லும் மனிதர்களே இருக்க மாட்டார்கள்.
உருவத்தில் மிகச்சிறிதாக இருந்துகொண்டு மனிதர்களை பாடாய் படுத்தி விடுகின்றன கொசுக்கள்.

குறையாத கொசுக்கடி
கொசுக்களால் தூக்கத்தை மட்டுமின்றி உயிரையே தொலைத்துவிடுகின்றனர் கோடிக்கணக்கான மனிதர்கள். அந்த அளவுக்கு ஆபத்தான உயிரினமாக அது இருக்கிறது. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை வைத்தே கொசுக்கடியில் இருந்து தவிர்க்க சாதாரண காயில்கள் தொடங்கி கொசு பேட், மின்சாதன கருவி என பல பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. எல்லாத்தையும் வாங்கியாச்சு... ஆனால், கொசுதான் குறைந்தபாடில்லை என்று புலம்பும் மனிதர்களில் நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம்.

கொசுக்கடி பற்றி ஆய்வு
இப்படி மனிதர்களின் நிம்மதியை கெடுக்கும் கொசுக்களை நெருங்கவிடாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கொசுக்கள் ஏன் அதிகளவில் மனிதர்களை கடிக்கின்றன என்ற ஆய்வும் நடந்து வருகிறது. உலகில் உள்ள பல கோடிக்கணக்கான உயிர்களில் மனிதர்களைதான் கொசுக்கள் விரும்பி கடிக்கும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
இதற்கான காரணத்தைதான் தற்போது அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கிறது. அதை நேச்சர் (Nature) என்ற இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கொசுக்கள் வாசனையை வைத்தே விலங்குகளை அதிகம் நெருங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருக்கும் சிட்ரஸ் அமில வாசனை (எலுமிச்சை, ஆரஞ்ச் போன்ற பழங்களில் இருப்பது) கொசுக்களை ஈர்க்கின்றனவாம்.

மரபணு ஆராய்ச்சி
டெங்கு, ஜிகா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்கு காரணமான ஏடிஸ் இன கொசுக்கள் விலங்குகளை விட மனிதர்களின் வாசனையை விரும்புவதை அறிந்த விஞ்ஞானிகள், கொசுக்களின் மூளை எந்தெந்த வாசனைகளை எந்த அளவுக்கு விரும்புகின்றன என்பதை அறிய முயற்சித்தனர். இதற்காக கொசுக்களை மரபணு ரீதியாக ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் விதவிதமான வாசனைகளில் அவற்றின் மூளையின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்து கண்டறிந்துள்ளனர்.

இதுதான் காரணம்
இதற்காக 16 மனிதர்கள், 2 எலிகள், 3 பன்றிகள், 2 காடைகள், ஒரு ஆடு, 4 நாய்களின் ரோமங்கள், கம்பளி மாதிரிகள் ஆகியவற்றை சேகரித்த விஞ்ஞானிகள் அவற்றை கொசுக்களை வைத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது மனிதர்களின் ரோமங்கள் கொசுக்களை அதிகம் ஈர்த்துள்ளன. இதற்காக கொசுக்களின் மூளையில் 2 ரசாயனங்கள் உருவாகின்றன. அவை டெகனால், அண்டெகனால் என அழைக்கப்படுகின்றன. ஆரஞ்சு, சிட்ரஸ் வாசனை கொண்ட அவை மனித வாசனையால் செறிவூட்டப்பட்டுள்ளன. இதுதான் மனிதர்களை கொசுக்கள் ஈர்ப்பதற்கான காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications