டாலருக்கு முடிவுரை எழுதும் பிரிக்ஸ்? ஹை டென்ஷன் மோடில் டிரம்ப்.. அப்போ மேட்டர் கன்பார்ம் தானா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் பிரிக்ஸுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுப்பார் என்றே தெரிகிறது. அதாவது பிரிக்ஸ் அமெரிக்க நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாக விமர்சித்த டிரம்ப், பிரிக்ஸ் நாடுகள் மீது கூடுதல் வரிகளையும் விதிப்பதாக எச்சரித்துள்ளார். இது சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. டிரம்ப் திடீரென பிரிக்ஸ் பக்கம் திரும்பியது ஏன்.. இப்போது வரிகளை என மிரட்டல் விடுப்பது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்தியக் கிழக்கு பதற்றம் காரணமாகச் சில காலம் வரி விவகாரத்தில் அமைதியாக இருந்த டிரம்ப் இப்போது மீண்டும் வரிகளை அறிவிக்க ஆரம்பித்துவிட்டார். பிரிக்ஸ் நாடுகளைக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இதில் எந்த விதிவிலக்கும் இருக்காது என்பதை டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

அமெரிக்க விரோதக் கொள்கைகள்
அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டாலும் அது என்ன நடவடிக்கை என்பதை அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை. அதேநேரம் ஆறு மாதங்களுக்கு முன்பு சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு நாணயத்தைப் பயன்படுத்தினால் 100% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். மேலும், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பிரிக்ஸ் அமைப்பால் மாற்ற முடியாது என்றும் அப்படி முயற்சி நடந்தால் அவர்கள் அமெரிக்காவிற்கு குட்பை சொல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சர்வதேச வர்த்தகத்தில் டாலர்
இதில் விஷயம் என்னவென்றால் இப்போது சர்வதேச வர்த்தகத்திற்கு டாலரே பயன்படுத்தப்படுகிறது. அதாவது இப்போது ஜப்பானில் இருந்து ஒரு பொருளை வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். நமது நாணயம் ரூபாய்.. ஜப்பானின் நாணயம் யென்.. ஆனால் நாம் ஜப்பான் பொருளை இறக்குமதி செய்யும்போது ரூபாய் மற்றும் நாணயம் என இரண்டிலும் பணம் தர மாட்டோம். மாறாக டாலரில் தான் பணம் தருவோம். இப்படி கிட்டதட்ட எல்லாச் சர்வதேச வர்த்தகமும் டாலரில் தான் நடக்கிறது.
காரணம் என்ன!
இந்த டாலருக்கு பதிலாகப் புதிய கட்டண முறைகளை உருவாக்கும் முயற்சியில் பிரிக்ஸ் இறங்கியுள்ளது. மேலும், நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்கும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இருந்தது. இந்தச் சூழலில் தான் டிரம்ப் கூடுதல் விதிகளை விதிக்கப்போவதாக அறிவித்தார். டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா இது "மிகவும் தவறான மற்றும் பொறுப்பற்ற செயல்" என்று கூறினார். வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது சீனாவும் டிரம்பை கண்டித்தது.
ஏன் முக்கியம்
கடந்த காலங்களிலும் டாலரை மாற்ற முயற்சிகள் நடந்தாலும் அது வெற்றி அடைந்தது இல்லை. பிறகு ஏன் டிரம்ப் டென்ஷன் ஆகிறார் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். மேற்கத்திய பொருளாதார வல்லுநர்கள் என்ன சொன்னாலும், இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகளுக்கு ஒரு சவாலாக உருவெடுத்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த முறை சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்குப் பதிலாக வேறு நாணயத்தைப் பயன்படுத்தும் பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது.
வளரும் மற்றும் பின்தங்கியுள்ள நாடுகளில் பிரிக்ஸ் நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதால் அது அமெரிக்காவுக்குச் சிக்கலாக இருக்கிறது. இதன் காரணமாகவே டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் ஒரு நாணய முறையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தான் டிரம்ப் மிரட்டல்களை விடுத்து வருகிறார்.
பிரிக்ஸ் பின்னணி
பிரிக்ஸ் அமைப்பு 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் BRIC என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. 2010இல் தென்னாப்பிரிக்கா இணைந்ததால் BRICS என மாறியது. 2024இல் எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்ததால் அது பிரிக்ஸ்+ ஆனது.. பிறகு 2025இல் இதில் இந்தோனேசியாவும் இணைந்தது.
இது தவிர தாய்லாந்து, மலேசியா, கியூபா, நைஜீரியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் உட்பட மேலும் 10 நாடுகள் 'பார்ட்னர்' அந்தஸ்தைப் பெற்றுள்ளன. சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், அஜர்பைஜான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இப்படி பிரிக்ஸின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதே டிரம்பின் அச்சத்திற்கும் ஆவேசத்திற்கும் காரணம்!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications