பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை எப்படி அரசிடம் பதிவு செய்யலாம்? என்னென்ன பலன்? இதோ முழு விபரம்.
சென்னை: நம் நாட்டில் ஒவ்வொரு நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் தொடங்கும் நிறுவனம் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக கருதி அரசு சார்பில் நடவடிக்கை பாயும். இதனால் வணிக அமைப்பை சட்டப்பூர்வமாக முறைப்படி பதிவு செய்வது எப்படி? என்னென்ன வகைகள் உள்ளது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வணிக அமைப்பையும் சட்டப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது . தொழில்முனைவோர் அல்லது வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிக அமைப்புகளை பதிவு செய்யும்போது ஒரு உகந்த வணிக கட்டமைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சிலர் தங்கள் வணிக அமைப்பை ஒரு கூட்டு நிறுவனமாக பதிவு செய்யலாம், மற்றும் சிலர் அதை ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகப் பதிவு செய்யலாம்.

ஒரு வணிக அமைப்பை வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகப் பதிவு செய்வதில் ஒரு சில தனிப்பட்ட நன்மைகள் இருப்பதோடு இயக்கச் செயல்பாடுகளில் ஒரு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இருப்பினும், ஒரு வணிக அமைப்பை வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகப் பதிவு செய்வதற்கு முன் பதிவு தொடர்பான நடைமுறைகளை நன்கு அறிந்திருப்பது மிகவும் அவசியம். இந்த வலைப்பதிவு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனப் பதிவு நடைமுறைகள் குறித்து புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்
ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரையறையுடன் கூடிய உரிமையாளர்களால் தனிப்பட்டு சொந்தமாக நடத்தப்படும் பிரிவைச் சேர்ந்த ஒரு வணிக நிறுவனம் ஆகும். இந்தியாவில், ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் அதிகபட்சமாக 200 பங்குதாரர்களைக் கொண்டிருக்கலாம். நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் இந்த பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையில் தங்களின் உரிமையின் கீழ் வைத்திருக்க வேண்டும். அவற்றை பொதுவெளியில் அவர்களால் விற்க முடியாது.
வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் நன்மையளிக்கக் கூடிய சிறந்த ஒரு அம்சம் ஒரு வேளை நொடிப்பு நிலை ஏற்படும் பட்சத்தில் பங்குதாரர்களின் தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் அது தொடர்பான கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருப்பதுதான்.
நிறுவன பதிவுக்கான வடிவங்கள்
ஒரு வணிக உரிமையாளர் தேர்வுசெய்யக்கூடிய சில பொதுவான நிறுவனப் பதிவு வடிவங்கள் இங்கே உள்ளன.
● கூட்டாண்மை நிறுவனப் பதிவு
● வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (PLC)
● உரிமையாளர் நிறுவனப் பதிவு
● வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனப் (LLP) பதிவு
● ஒரு நபர் நிறுவனப் (OPC) பதிவு
● அரசு சாரா நிறுவனப் பதிவு (பிரிவு 8 நிறுவனப் பதிவு)
இனி ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தைப் பதிவு செய்ய நீங்கள் மேற்கொள்ளவேண்டிய படிநிலைகளை பார்க்கலாம்.
டிஜிட்டல் கையொப்பம்
வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகப் பதிவு செய்ய டிஜிட்டல் கையொப்பங்கள் கட்டாயமாகும். பதிவு நடைமுறைகள் முற்றிலும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படுவதால் (தனியார் மற்றும் அரசு ஆன்லைன் மார்க்கெட் பிளேசஸ் (online marketplaces) மற்றும் இட்டார் இயங்கு தளங்களால் வழங்கப்படுகிறது) படிவத்தில் டிஜிட்டல் கையொப்பம் தேவைப்படுகிறது. சங்க அமைப்பு விதிகள் (Articles of Association-AOA) மற்றும் சங்க விதித்தொகுப்பு(Memorandum of Association MOA) ஆகியவற்றின் கீழ் அனைத்து சாட்சிகள் மற்றும் சந்தாதாரர்களின் டிஜிட்டல் கையொப்பங்கள் கட்டாயமாகும். டிஜிட்டல் கையொப்பத்தை இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நீங்கள் பெறலாம். இங்கே, DSC வகுப்பு 3 வகைப்பிரிவை நீங்கள் பெற வேண்டும்.
DIN-க்கு விண்ணப்பம்
ஒவ்வொரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இயக்குநர்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு இயக்குநர் அடையாள எண் (DIN) அதன் இயக்குநரை அடையாளம் காட்டுகிறது. அந்த நிறுவனத்தின் ஒரு இயக்குநர் DIR 3 படிவத்தை தாக்கல் செய்யலாம் அல்லது SPICe+ தாக்கல் செய்வதன் மூலம் வழங்கப்படும் DIN-ஐ பெறலாம். DIR 3-க்கு ஒரு இயக்குநர் PAN மற்றும் ஆதார் அட்டை விவரங்கள் போன்ற அடிப்படைத் தகவல்களை வழங்க வேண்டும். இருப்பினும், SPICe+ நடைமுறைகளின் கீழ், DIN-க்கு மூன்று இயக்குநர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் மூன்றுக்கும் மேற்பட்ட இயக்குநர்களை நியமிக்க விரும்பினால், நிறுவனம் பதிவு செய்யப்பட்ட பிறகு அவர்களை நியமிக்க வேண்டும்.
நிறுவன பெயருக்கான ஒப்புதல்
நிறுவனத்தின் இயக்குநர்களுக்கான DINகள் வழங்கப்பட்டவுடன், நிறுவனம் அதன் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். SPICe+ பகுதி-A இன் கீழுள்ள 'பெயர் பதிவு' வசதியின் மூலம் நிறுவனத்தின் பெயரை முன்பதிவு செய்யலாம். அதற்கு மாற்று எற்பாடாக SPICe+ படிவத்தின் பகுதி-A மற்றும் பகுதி-B இரண்டையும் ஒன்றாக தாக்கல் செய்வதன் மூலம் நிறுவனத்தின் பெயரை முன்பதிவு செய்யலாம். இருப்பினும், ஒரே சமயத்தில் இரண்டு படிவங்களையும் தாக்கல் செய்யும் போது ஒரு பெயருக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்வது முக்கியம் .
படிவம் SPICe+ (INC-32)
புதிய நிறுவனங்களை பதிவு செய்வதற்கான, படிவம் SPICe+ ஐ 2020 பிப்ரவரி 23, முதல் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. SPICe+ படிவத்தின் பகுதி B முழுமையாக டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு பதிவு நடைமுறைகளை எளிதாக்கியுள்ளது. பெயர் அங்கீகரிக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பெயரின் இணைப்பைக் கிளிக் செய்து நிறுவன பதிவை நிறைவு செய்யவேண்டும்.
PAN மற்றும் TAN
SPICEe+ படிவம் தாக்கல் செய்யும்போதே , நிறுவனத்திற்கான PAN மற்றும் TAN எண்களுக்கும் விண்ணப்பிக்கலாம். பதிவு நடைமுறைகள் நிறைவு பெற்றவுடன், ஆன்லைன் அமைப்பு தானியங்கி இந்தப் படிவங்களை உருவாக்கி வழங்கும். வருமான வரித் துறை நிறுவனத்தின் கூட்டுப் பதிவுச் சான்றிதழுடன் (Certificate of Incorporation), இணைந்து PAN எண்ணையும் ஒதுக்கீடு செய்கிறது. நிறுவனத்தின் கூட்டுப் பதிவுச் சான்றிதழ், PAN மற்றும் TAN அடங்கிய ஒரு மின்னஞ்சலை பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்திடமிருந்து நீங்கள் பெறுவீர்கள்.
கடன் வசதி
வணிக நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக மேற்கொள்ள இந்திய சட்டங்களின் கீழ் நிறுவனத்தை பதிவு செய்யவேண்டியது கட்டாயமாகும். தொடக்கத்தில் முன்பு, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் சங்க விதித்தொகுப்பு(Memorandum of Association MOA) மற்றும் சங்க அமைப்பு விதிகள் (Articles of Association-AOA) தாக்கல் செய்வதன் மூலம் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களை பதிவு செய்ய அனுமதித்திருந்தது . இருப்பினும் தற்போது, SPICe+ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவன பதிவு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் அனைத்து படிவங்களும் இப்போது SPICe+ அமைப்பிற்குள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தை முறையாக நிறுவியவுடன் வணிக நடவடிக்கைகளை தொடங்க முக்கிய வங்கிகள் மற்றும் NBFCs களிடமிருந்து கடன் வசதியை எளிதாகப் பெறலாம்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications