சென்னை பெசன்ட் நகரில்.. கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்! பீச் பாய்ஸ் சார்பில் கொடியேற்றம்
சென்னை: நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னை பெசன்ட் நகர் எலைட் கடற்கரையில், பீச் பாய்ஸ் வால்க்கர்ஸ் சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாலசுந்தரம் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்.

சுதந்திர தினமான இன்று சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்கள், அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை பெசன்ட் நகரில், எலைட் கடற்கரையில் 'Beach boys walkers' சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாலசுந்தரம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த ஆண்டு விழாவில் அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.வெங்கடேசன், பீச் பாய்ஸ் அட்மின் மோகன் ராகவன், முன்னாள் அட்மின் ஏழுமலை, Media95 சிஇஓ பழனி ராஜா, மற்றும் பீச் பாய்ஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் எலைட் கடற்கரையில் பீச் பாய்ஸ் வால்க்கர்ஸ் சார்பாக தேசிய கொடி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications