மாநில உரிமைகளை கையில் எடுக்கும் எடப்பாடி.. அதிமுக பிரச்சாரம் தேர்தலில் எதிரொலிக்குமா?
சென்னை; வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களுக்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக தனது தேர்தல் பரப்புரையை "தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம்" என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் செய்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் வெறும் வாக்கியத்துக்காக மட்டுமே இதை சொல்வதாக தெரியவில்லை.காரணம் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் தொடங்கிய நாள்முதலே கொடுக்கும் பதிலடிகள் எல்லாம் நெற்றியடியாகவே உள்ளது.
இயல்பாகவே எடப்பாடி பழனிசாமி என்றும் பா.ஜ.க வை விமர்சனம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவந்தது. ஆனால் இந்த தேர்தல் பரப்புரையில் பா.ஜ.க வை நேரடியாகவே
தாக்கியுள்ளார். கச்சத்தீவு விஷயத்தில் பத்து வருடம் சும்மா இருந்த பா.ஜ.க என காட்டமாகவே பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பா.ஜ.க ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினையின் போது 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த கட்சி அண்ணா திமுக என்று மேடைகளில் கர்ஜித்த போது இவர் பழைய பழனிசாமி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
நீட் விவகாரத்தில் பா.ஜ.க வுடன் அப்போது கூட்டணியில் இருந்தாலும் எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த பழனிசாமி 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடை ஆளுநரை மீறி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டினார்.
கூட்டணியில் இருந்த போதே குறிவைத்து அடித்தவர் தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பிரச்சாரங்களில் அவரின் புதிய அவதாரத்தை காணமுடிகிறது. இது அதிமுகவிற்கு கூடுதல் தெம்பையும், தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியையும் தந்துள்ளது
இதை தொடர்ந்து, ஆந்திர அரசாங்கம் பாலாற்றில் தடுப்பணை கட்டுவதால் தமிழகத்தின் வடமாநிலங்கள் பாதிக்கப்படும் இதற்கு எதிராக ஒலித்த முதல் எடப்பாடி பழனிசாமியின் குரல். ஆனால் இதுவரை ஆளுங்கட்சி இதற்கு எந்தவொரு பதிலையும் தந்தாக தெரியவில்லை.
இப்படி தமிழ்நாட்டு உரிமைக்காகவும், இழந்த உரிமையை மீட்பதற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் என்னென்ன யுக்திகளை கையாள போகிறார் இது தேர்தலில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளே சொல்லும்
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications