Usily Upma Recipe: டெய்லி இட்லி, தோசைதானா? கணவர் கேட்டார்னா இந்த உசிலியை செய்து கொடுங்க!
Usily Upma Recipe: எப்போது பார்த்தாலும் இட்லி, தோசை செய்து போரடிக்கிறதா, இல்லை ஒரு நாள் மாவு அரைக்காமல் விட்டுவிட்டீர்களா? கவலையை விடுங்கள். பச்சரிசி, பயத்தம் பருப்பு இருந்தால் போதும். சூப்பரான டிஃபன் செய்துடலாம். வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
வீட்டில் காலை, இரவு வேளைகளில் இட்லி, தோசை, ரவா உப்புமா, சேமியா உப்புமா என்றால் போரடிக்கும். என்றாவது ஒரு நாள் சப்பாத்தி, பூரி போடலாம். ஆனால் தினமும் இது சாத்தியப்படாது. எனவே எளிதாக ஒரு டிபன் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
பயத்தம் பருப்பு முக்கால் கப்
கடுகு- 1 ஸ்பூன்
கடலை பருப்பு- 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை- சிறிது
உப்பு- தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை
பச்சரிசியையும் பயத்தம் பருப்பையும் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பிறகு குக்கரை சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய்யை விடவும்.
அதில் கடுகை போட்டு அது பொரிந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறம் ஆனதும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் தேங்காய் துருவலை போட்டு வதக்கி ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் தூவ வேண்டும்.
இவை எல்லாம் வதங்கி ஒரு வாசனை வரும் பாருங்கள், செமையாக இருக்கும். அடுத்தது 1 கப் அரிசி+ முக்கால் கப் பயத்தம் பருப்புக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் அரிசி, பயத்தம் பருப்பை அதில் போட்டு நன்றாக கலக்கி, உப்பு சரிபார்த்துவிட்டு குக்கர் மூடியை மூடி இரு விசில்கள் வரும் வரை வேகவிடவும். பின்பு குக்கரில் பிரஷர் போனதும் சூடாக சாப்பிடவும். இதற்கு தொட்டுக்க தேங்காய் சட்னி செம காம்பினேஷன். தொட்டுக்க இல்லாமலேயே சாப்பிடலாம்.
தேங்காய் எண்ணெய் வாசனையுடன் உசிலி உப்புமா அருமையாக இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications