லட்சுமி குபேர பூஜை
தீபாவளி அன்று செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு லட்சுமி குபேர பூஜை. இந்தப் பூஜை செய்வது செல்வம் பெருக வழி வகுக்கும்.
குபேர பூஜை பற்றி அறியும் முன் நராகசுரன் சம்ஹாரம் பற்றிப் பார்ப்போம்.
நரகசுரன் பல வரங்களையும் பெற்று தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான்.
அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடையும் போது மந்தார மலை மத்தாக பயன்படுத்தப்பட்டது. அதை நிறுத்த ஆதாரமாக மகாவிஷ்ணு கூர்மஅவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மலையை தாங்கி பிடித்துக் கொண்டார்.
அப்போது பூமா தேவிக்கும், மகாவிஷ்ணுவுக்கும் மகனாக பிறந்தவன்தான் நரகாசுரன். பூமா தேவி சத்யாபாமாவாக உருவெடுத்து கிருஷ்ணாவதாரத்தின்போது கிருன்ணனை மணந்து கொண்டார். இதனால் சத்யபாமாவுக்கு பூமாதேவியின் அம்சம் உண்டு.
கிருஷ்ணாவதாரத்தில் கம்சனை சம்ஹாரம் செய்தபின் துவாரகையில் ருக்மணியை மணம் புரிந்து கொண்டார் கிருஷ்ணர். அதன் பின் சத்யபாமாவை மணம் புரிந்துகொண்டார்.
இந் நிலையில் தேவேந்திரன் நரகாசுரனின் கொடுமைகள் குறித்து கூறியதும் பாமாவுடன் நராகசுரனை சம்ஹாரம் செய்ய கிளம்பினார் கிருஷ்ணர்.
நரகாசுரனின் தாய் பூமாதேவியான சத்யபாமா. தந்தை கிருஷ்ணரான மகா விஷ்ணு.
தந்தை மகனை கொல்ல துணியலாம். ஆனால், தாய் துணிவாரா? மனம் வருமா? வரும். மகன் அசுரானாகி துன்பம் தருவதால் அவனை கொல்ல தாயும்தயங்கமாட்டாள் என்று உணர்த்தத்தான் பாமாவுடன் சென்று நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கிருஷ்ணர்.
பிராக்ஜோதிடபுரத்தின் அரசனாக இருந்த நரகாசுரனைக் கொன்ற பின் அவனது மகனான பகதத்தனை அரசனாக நியமித்தார் கிருஷ்ணர்.
அவனும் தன் தந்தையை கிருஷ்ணர் கொன்றதில் தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்று காட்டும் விதமாக கிருஷ்ணர் வரும் போதெல்லாம் வெடிகள்,மத்தாப்புகள் கொளுத்தி அவரை வரவேற்றான்.
ஆண்டு தோறும் கிருஷ்ணர் வரும் போது பட்டாசு வெடித்து தீப ஆளி (தீப வரிசை) வைத்து நகரை அலங்கரித்ததால் நரகாசுரன் இறந்த நாள் தீபாவளி என்றுபெயர் பெற்றதாக ஒரு வரலாறு கூறுகிறது.
குபேர பூஜை:
நரகாசுரனைக் கொன்ற கிருஷ்ணராகிய மகாவிஷ்ணுவின் மார்பில் குடி கொண்டிருப்பவள் லட்சுமி. நரகாசுரன் கொல்லப்பட்ட தினத்தன்று விஷ்ணுவையும் அவர்மனைவியான லட்சுமியையும் பணத்திற்கு அதிபதியான குபேனையும் பூஜித்தால் பஞ்சமில்லாமல் பணம் பெருகும் என்பது ஐதீகம்.
லட்சுமி படத்தையும், குபேர யந்திரத்தையும் வைத்து பூக்களுடன் பணம், காசுகளையும் போட்டு பூஜை செய்ய வேண்டும். மாலை 6 மணிக்கு முன் பூஜை துவங்கப்படவேண்டும்.
குத்துவிளக்கின் 5 முகங்களும் ஏற்றப்பட்டு பூஜை செய்ய வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications