தோப்புக்கரணம் போடுவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போடும் வழக்கமும், தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கமும் உள்ளது.

தோப்புக்கரணம் போடுவது குறித்து புராண நிகழ்ச்சி ஒன்று கூற்படுகிறது.

Ganeshaஒரு முறை விநாயகர் தனது மாமா மகாவிஷ்ணுவின் சக்கரத்தை விளையாட்டாக பிடுங்கி தன் வாயில் போட்டுக் கொண்டுவிட்டார். அதிர்ந்து போனார்மகாவிஷ்ணு.

விநாயகர் பலம் பொருந்தியவர். அவரை மிரட்டி சக்கரத்தை வாங்க முடியாது. அவரை சிரிக்க வைத்து அவர் வாயிலிருந்து சக்கரம் விழுந்தால் சக்கரத்தைஎடுத்துக் கொண்டுவிடலாம் என்று மகாவிஷ்ணு ஐடியா போட்டார்.

தன் நான்கு கைகளாலும் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதைப் பார்த்த விநாயகருக்கு சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்துசிரித்தார் விநாயகர். அப்போது வாயிலிருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகா விஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.

தோப்புக்கரணம் போட்டதால் மகா விஷ்ணுவுக்கு அவரது பொருளைத் திருப்பித் தந்தார். அதே போல நாமும் தோப்புக்கரணம் போட்டால் விநாயகர்வேண்டிய வரத்தை அருள்வார் என்பது நம்பிக்கை.

அருகம்புல் மகாத்மியம்:

Ganeshaவிநாயகர் பூஜையின் போது பூக்களுடன் அருகம்புல்லும் கட்டாயம் இடம் பெறும்.

அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கி விட்டார், அனலாசுரன் பெயருக்கு ஏற்றார் போல் அனலாக, தீயாக கொதிக்கக்கூடியவன்.அனலாசுரனை விழுங்கிய பின் அந்த அனலை தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர்.

அருகம்புல் குளிர்ச்சியானது. அருகம்புல்லை விழுங்கி அனலாசுரனை விழுங்கியதால் ஏற்பட்ட சூட்டை தணித்துக் கொண்டார். இதனால் விநாயகர் பூஜையில்அருகம்புல் சிறப்பான இடம் பெறுகிறது.

பூ இல்லாவிட்டாலும் கூட அருகம்புல் வைத்து பூஜை செய்தால் போதுமானது. அருகம்புல் மூலம் விநாயகரின் வயிற்றை தடவிக் கொடுப்பதை பல விநாயகர்கோவில்களில் பார்க்கலாம். அதற்கு காரணமும் அனசுரனை விழுங்கிய சூடு தணிய வேண்டும் என்பதற்காகத்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+