சரண கோஷத்தால் அதிர்ந்த சபரிமலை.. விடை கொடுக்கிறார் ஐயப்ப சாமி! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகள் நிறைவடைந்து நிலையில் இன்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நாளை பந்தளம் ராஜா குடும்ப பிரதிநிதி சுவாமி தரிசனம் செய்த பின்பு நடை அடைக்கப்பட்டு, அதன் பின் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது
சபரிமலையில் 2025-26-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, கடந்த 14-ந் தேதி முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அய்யப்பன் மகர ஜோதி வடிவில் பக்தர்கள் காட்சி அளித்தார்.
நடப்பு சீசனை முன்னிட்டு நேற்றுடன் நெய்யபிஷேக, களபாபிஷேக வழிபாடுகள் நிறைவடைந்தது. கோவிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து இரவு மாளிகப்புரத்து குருதி சமர்ப்பன சடங்குகளுக்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவாக நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்படும். நாளை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. அத்துடன் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுடன், தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவு பெறும்.
நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவாக நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்படும்.
நாளை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. அத்துடன் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுடன், தை மாத பூஜை வழிபாடுகளும் நிறைவு பெறும். மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications