திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் திறப்பு.. கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்!
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சுவாமி வழிபாடு நடந்து வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்ட பின், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அந்த வகையில் ஏகாதசியான இன்று, பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வழியாக நுழைந்து இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை ஆகும்.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதன்பின் பக்தர்கள் சொர்க்க வாசலில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அதேபோல் சொர்க்க வாசலில் விதவிதமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏழுமலையானின் கற்ப கிரக சன்னதிக்கு ஒட்டியபடி பக்தர்கள் சொர்க்க வாசல் வழியே உள்ளே சென்று உண்டியல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து வெளியே வருகின்றனர். அதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயிலுக்கு வெளியே அஷ்ட லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் திருப்பதி கோயிலே ஜொலிக்கிறது.
அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சேலம் கோட்டை பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications