Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Thai Amavasya 2026: நாளை தை அமாவாசை! முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை அமாவாசை நாளை (ஜன.18)அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு)தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது என்பதையும் வழிபடும் முறையையும் காண்போம். தை அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடாமல் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என்பார்கள்.

இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: தை அமாவாசை நெருங்குகிறது! இந்த வருடம் அது எப்போது வருகிறது, எப்படி விரதம் இருக்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.

spirituality Thai Amavasai 2026

ஆனால், அதைவிட முக்கியம், இந்த நாளில் முன்னோர்களை ஏன் ஆராதிக்கிறோம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.பொதுவாக, தை மாதம் நிறைய விசேஷங்களைக் கொண்டது. அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். இது ஒரு திருமண மாதம். ஆனால், தை அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபடுவது ஏன் முக்கியம்?

அதைச் செய்யாமல் எந்த நல்ல காரியமும் தொடங்கக் கூடாது என்பது ஏன்?"நாம இன்னைக்கு இப்படி உட்கார்ந்து இருக்கோம்னா அதுக்குக் காரணம் நம்முடைய பெரியவங்க, நம்முடைய முன்னோர்கள் ஆசிர்வாதம்தான். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் செய்யும் ஒரு வழிபாடுதான் இந்த முன்னோர் வழிபாடு.

மார்கழி மாதம் தேவர்களுக்கு இரவு, தை மாதத்தில் தான் விடியற்காலை தொடங்குகிறது. சூரிய வழிபாடு என்பது ஆதித்தனுடைய வழிபாடு. ஆதித்தன் உதயமான பிறகுதான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது நியதி.

உங்க தாத்தாவுக்கோ பாட்டிக்கோ ஒரு சின்ன பரிசை கொடுத்துப் பாருங்கள். அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அதுபோல, அமாவாசை அன்று நீங்க எள்ளும் தண்ணீரும் இறைக்கும்போது, உங்களுடைய முன்னோர்கள் சந்தோஷப்படுவார்கள்.

பெரும் ஆனந்தம் அடைவார்கள். முன்னோர் சாபங்களில் இருந்து தப்பிக்கவும், தெய்வத்தை வணங்குவதற்குத் தகுதியானவர்களாக மாறவும் இந்த வழிபாடு அவசியம். "முன்னோர்களை கும்பிடாம தெய்வத்தை மட்டும் கும்பிட்டா, நீ இந்த உலகத்துக்கு வந்ததற்கு காரணமான முன்னோர்களையே மறந்துட்டியேன்னு தெய்வம் கேட்கும்,".

இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 18, 2026, ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 1:20 மணிக்கு அமாவாசை தொடங்கி, ஜனவரி 19 (திங்கள்கிழமை) அதிகாலை 2:31 வரை நீடிக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கடற்கரைக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே எள்ளை கையில் வைத்துக் கொண்டு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்யலாம். வசதி இருப்பவர்கள் அந்தணர்களைக் கூப்பிட்டு வேள்வி செய்யலாம்.

ஆனால், செய்ய மறக்காதீர்கள்!ஆண்கள், தாய் தந்தை இருவர் இல்லாவிட்டாலும் விரதம் இருக்க வேண்டும். பெண்கள், கணவர் உயிரோடு இருக்கும் வரை எள்ளும் தண்ணீரும் இறைக்கக் கூடாது. அப்படி செய்தால், இலை போட்டு படைத்து அல்லது தர்மம் செய்யுங்கள். இதன் மூலம் சாபம் ஏற்படாமல் தப்பிக்கலாம்.

முன்னோர்களுக்கு படையல் போட்டுவிட்டு, அந்த உணவை நாம் சாப்பிடலாம். அமாவாசை விரத நாளில் ஒரு உயிருக்காவது உணவு கொடுங்கள். மாலையில் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றுங்கள். முன்னோர்களின் ஆசிர்வாதம் எப்போதும் நமக்கு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+