Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பன் ஐயப்பன் அருள் முழுமையாக வேண்டுமா? சபரிமலை பக்தர்கள் மறந்தும் ’இந்த’ விஷயங்களை செய்யக் கூடாது!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சபரிமலை பக்தர்கள் மண்டல பூஜை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான சில வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.. இந்த 22 வழிமுறைகளை கடைபிடித்தாலே அப்பன் ஐயப்பனின் அருளை முழுமையாக பெறலாம்..

கேரளாவின் வனப்பகுதியில் வாழ்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் பாலித்து வரும் ஐயப்பனை காண ஆண்டுக்காண்டு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

spirituality sabarimala mandala pooja

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாக விரதம் இருந்து, பார்த்தசாரதியின் மைந்தனை காண காடு மலை தாண்டி உண், உறக்கமின்றி, விரதம் இருந்து பக்தர்கள் ஐயப்பனை காண படை எடுத்து வருகின்றனர்.

சபரிமலை என்றாலே பக்தர்கள் எண்ணத்தில் மகிழ்ச்சி கடல் பெருக்கெடுத்து ஓடும். வெயில், மழை, குளிர் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை காணும் அந்த ஒரு நொடிக்காக ஆண்டு முழுவதும் காத்திருக்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள். இப்படியாக சபரிமலைக்கு செல்வது குருநாதர்களின் வழிகாட்டுதல் படியும் ஆசி படியும் நடக்க வேண்டும்.

அதே நேரத்தில் சில முக்கிய வழிமுறைகளை மாலை அணிவிக்கும் போது அதற்குப் பிறகும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்..

* கார்த்திகை முதல் நாள் மாலை அணியும்போது நல்ல நேரம் நட்சத்திரம் உள்ளிட்டவற்றை பார்க்க தேவையில்லை. இதே போல மார்கழி மாதப் பிறப்பின் முதல் நாளிலும் நாள் நட்சத்திரம் நல்ல நேரம் பார்க்காமல் மாலை அணியலாம்.

* கார்த்திகை முதல் நாளுக்கு பிறகு மாலை அணிபவர்கள் நல்ல நேரம் பார்த்து அணிவது நல்லது.

* தன்னிச்சையாக எப்போதும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிய கூடாது. பெற்றோர், மனைவி உள்ளிட்ட சம்மதம் இருந்தால் மட்டுமே மாலை அணிய வேண்டும்.

* மாலை அணிவதற்கு முதல் நாள் மாலையை பாலில் ஊற போட்டு அடுத்த நாள் அணிய வேண்டும். உடைகளையும் தண்ணீரில் நனைத்து உலர்த்திய பிறகு அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் புத்தாண்டுகளை அணியக் கூடாது.

* கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிய முடியாதவர்கள் அந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம், புதன், சனிக்கிழமைகளில் மாலையை அணிந்து கொள்ளலாம்.

* மாலையை தயார் செய்த பின் கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து பூஜை செய்தபின் 18 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்ற குருநாதர் இடம் கொடுத்து அவரின் சொல் பேச்சு கேட்டு நடந்து மாலை அணிந்து கொள்ள வேண்டும். அவரே குருசாமியாக உங்களை வழிநடத்தி செல்வார்.

* மாலை அணிந்த பின் காலையும் மாலையும் நிச்சயம் குளித்து வேண்டும்.

* பக்தர்கள் நீலம், கருப்பு, பச்சை வண்ண ஆடைகளை அணியலாம். கண்டிப்பாக துண்டு அணிவது அவசியம்.

* ஐயப்பனே உங்கள் எண்ணம் முழுவதும் நிறைந்திருக்க வேண்டும். அனைத்திலும் ஐயப்பனே குடி கொண்டிருக்க வேண்டும்.

* முடி வெட்டுவது கூடாது. எண்ணெய் தேய்த்து குளிப்பது, சோப்பு உபயோகித்து குளிப்பது ஆகியவை கூடவே கூடாது.

* வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, அரட்டை, கெட்ட சிந்தனைகளை மனதில் ஏற்றக்கூடாது.

* வெற்றிலை பாக்கு பழக்கமும், பகலில் தூங்குவதும் கூடவே கூடாது.

* இரவிலும் தாங்கள் அணிந்திருக்கும் துண்டை விரித்து மட்டுமே உறங்க வேண்டும்.

* மெத்தை தலையணை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது.

* சபரிமலையில் காடு மலையை கடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும். அதனால் செருப்பு அணியவே கூடாது.

* புகை, மது, ஆகியவை கூடாது, மாமிசம் காம சிந்தனை இருக்கக் கூடாது.

* மாதவிடாய் ஆன பெண்களுக்கு அருகில் செல்வது வீட்டில் இருப்பது. அவர்களை பார்ப்பது கூடாது.

* பூப்புனித நீராட்டு விழா, துக்க நிகழ்ச்சி, குழந்தை பிறந்த வீடுகளுக்கு மாலை அணிந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் செல்லக்கூடாது.

* ஆண் பக்தர்களை ஐயப்பா என்றும், பெண் பக்தர்களை மாளிகைபுரத்தம்மன் என்றும், சிறுவர் சிறுமிகளை மணிகண்டா என அழைக்க வேண்டும்.

* ஒரு பக்தர் மற்றொரு பக்தரை சந்திக்கும் போதும் பேசும் முன்பும் பேசிய பின்பும் சுவாமியே சரணம் ஐயப்பா என சொல்ல வேண்டும்.

* வீட்டிலிருந்து யாத்திரை செல்லும் பக்தர்கள் நேரடியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தான் செல்ல வேண்டும். தரிசனம் முடிந்த பின் நேரே வீட்டுக்கு வரவேண்டும்.

* சுற்றுலா செல்வது பிற கோவில்களுக்கு செல்வது ஆகியவை கூடவே கூடாது.

மேற்கண்ட வழிமுறைகளை குருசாமியின் வழிகாட்டுதலோடும் ஐயப்பனின் ஆசியோடும் கடைப்பிடித்தால் நிச்சயம் உங்கள் சபரிமலை பயணம் இனிதாகவே அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+