இந்த 3 ராசிக்காரர்கள் மட்டும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக் கூடாதாமே? சாஸ்திரம் சொல்வது என்ன?
திருப்பதி: திருப்பதிக்கு சில ராசிக்காரர்கள் மட்டும் போகவேக் கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருப்பதி சென்றால் திருப்பம் என கூறுவார்கள். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் திருப்பதிக்கு ஒரு முறை போய்விட்டு வந்தால் அந்த கஷ்டங்களுக்கு தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை.
பணக்கஷ்டம் இருந்தால் திருப்பதிக்கு திங்கள்கிழமைகளில் சென்று வர வேண்டும் என்கிறார்கள். அது போல் வியாழக்கிழமைகளில் எளிய சேவையான பஞ்சகட்சம், துளசி மாலை அணிந்துள்ள பெருமாளை சந்தித்தால் கோடி புண்ணியம்.

இந்த நிலையில் திருப்பதி பயணம் எல்லோருக்குமே வளர்ச்சியை தருமா என்றால் அது இல்லை. யார் திருப்பதிக்கு சென்றுவந்தால் அவர்கள் வீட்டில் கெடுதல் நடக்கிறதோ அவர்கள் திருப்பதிக்கு செல்வதை தவிர்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் மட்டும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக் கூடாது என்கிறார்கள். அதாவது ஆண்டுக்கு ஒரு முறை செல்லலாம். ஆனால் அடிக்கடி செல்ல வேண்டாம் என்கிறார்கள். சிம்ம ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகிய 3 ராசிக்காரர்கள் திருப்பதிக்கு ஆண்டுக்கு ஒரு முறை செல்லலாம் என்கிறது சாஸ்திரம்.
எப்போதும் சென்று வந்தால் கடனாளி ஆகிவிடுவார்கள் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு பிறருக்கு உண்மையாக நடந்துள்ளது என தெரியவில்லை. ஒரு வேளை விதிப்படி ஒருவர் கடனாளியாகவே இருக்க வேண்டும், அப்படியேதான் இருப்பார். இதில் கோயில் மீது தவறு சொல்லக் கூடாது என்று்ம கூறுகிறார்கள்.
அப்படியென்றால் திருப்பதிக்கு ஆண்டுதோறும் கூட்டம் குறையத்தானே வேண்டும். ஏன் அதிகரித்து வருகிறது என்ற கேள்வியும் உள்ளது. எனவே இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் அவரவர் மனதை பொருத்தது. அந்த 3 ராசிக்காரர்களில் தனுசு ராசிக்காரர் ஒருவர் அடிக்கடி திருப்பதி சென்றுதான் வந்தார். அவருக்கு கடன் இருந்தது. ஆனாலும் நன்றாகத்தான் இருந்தார். இன்னொரு கும்ப ராசிக்காரரும் அடிக்கடி திருப்பதி சென்றார், ஆனால் அவருக்கு கடன் ஏதும் ஏற்படவில்லை.
இந்த 3 ராசிக்காரர்களும் திருப்பதிக்கு செல்ல ஆசைப்பட்டால் அவர்கள் உண்டியலை காணிக்கையாக எடுத்துக் கொண்டு அதில் கிடைக்கும் பணத்தில் பயண செலவு போக மீதமுள்ளதை திருப்பதி உண்டியலில் போட்டுவிடலாம். எது எப்படியோ திருப்பதிக்கு செல்ல நாம் என்னதான் பிளான் போட்டாலும் வெங்கடாஜலபதி அழைத்தால்தான் எல்லாமே கைக் கூடும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications