மீனம் ராசிக்கு சொத்துக்கள் யோகம்.. மீன ராசிக்காரர்களின் பலம், பலவீனம் இதுவே.. அன்புக்கு பஞ்சமில்ல
சென்னை: மீன ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? ஒருவருக்கு ஒரு ஆபத்து என்று சொன்னால், முதலில் ஓடிச்சென்று நிற்பவர்கள் இந்த மீன ராசியினர்தான்.. எப்பேர்ப்பட்ட கடினமான வேலையையும் செய்து முடிக்கும் மீன ராசிக்காரர்களின் பொதுப்படையான குணநலன்கள் என்ன? மீன ராசி பெண்களின் இயல்புகள் என்னென்ன? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மீன ராசியினரை ஹார்ட் ஒர்க்கர்ஸ் என்பார்கள்.. எந்த செயலையும் கடினம் என்று சொல்ல மாட்டார்கள்.. அதிலும் புதுமையான, அறிவார்ந்த விஷயங்கள் என்றால் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.

அன்புக்கு பஞ்சமில்லை
இவர்களிடம் அன்புக்கு பஞ்சமிருக்காது.. எதிலும் வெற்றியை நிலைநாட்டக்கூடியவர்கள். இதற்கு காரணம், இவர்களிடம் உள்ள பொறுமைதான்.. மனப்பக்குவம் நிறைந்தவர்கள்.. கலை ஆர்வம் மிக்கவர்கள்.. இலக்கியம், இசையில் நாட்டம் அதிகம்.
சொந்த காலில் நிற்பதால், குடும்ப பொறுப்புகளை தலையில் வைத்து சுமக்க கூடியவர்கள்.. மீன ராசியில் பிறந்தவர்களுக்கு கிரக பாதிப்பு பெரிதாக ஏற்படுவதில்லை. ஏனென்றால், இவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்து கொண்டேயிருக்கும். கற்பனை உலகில் மிதந்துகொண்டேயிருப்பார்கள்.. சுக வாழ்க்கையையே வேண்டும் என்று நினைப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களையே வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
கருத்து வேறுபாடுகள்
திருமணம் நடக்க சற்று தாமதமாகும்.. அதேசமயம், தம்பதிக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் மனநிம்மதியும் ஏற்படும். மீனராசியில் பிறந்த அனைவருக்குமே குழந்தை பாக்கியம் கிட்டுவதில்லை என்றாலும், வாழ்க்கை துணையால் கிட்டும்.. வாரிசுகளால் மீன ராசிக்காரர்களுக்கு பேர் புகழும் சேரும்.
துணையின் உறவுகள் மூலம் சில தேவையற்ற மனகுழப்பங்கள் ஏற்பட்டாலும் சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள். நல்லவர்களாக இருப்பதுதான் இவர்களின் பலவீனமும், பலமும்.. ஆனால், வல்லவர்களாக இருக்க மாட்டார்கள். அதனால்தான், நிறைய கஷ்டங்களை, இழப்புகளை சந்திப்பார்கள்.
ஆனால், ஆனால், பயந்த சுபாவம் கொண்டவர்கள்.. அதேபோல, ரகசியத்தை கட்டிக்காக்கும் திறன் இவர்களுக்கு குறைவு.. எதையுமே தனக்குள் மறைத்து கொள்ள மாட்டார்கள்.. சமயத்திற்கு ஏற்றபடி குணத்தை மாற்றி கொள்வதுடன், கெட்ட விஷயங்கள், கெட்ட சகவாசங்களுக்கும் வெகுசீக்கிரத்தில் விழுந்துவிடுவார்கள்.
வீண் விவாதங்கள்
எந்த அளவுக்கு ஒருவரிடம் பழகுகிறார்களோ, அதே வேகத்தில் விலகிவந்துவிடுவார்கள். அத்துடன் இவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்க மாட்டார்கள். அப்படியே இறங்கினாலும், சிலசமயம் காலை வாரி விட்டுவிடுவார்கள்.
வீண் விவாதங்களில் தாங்களே தலையை கொடுத்து சிக்கி கொள்வார்கள்.. விளையாட்டுத்தனமாக எதையாவது செய்து, அதிலும் வசமாக சிக்கி கொள்ள நேரிடும். அதேபோல, சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிய பிரச்சனையாக்கிவிடுவார்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால், மீன ராசிக்காரர்களிடம் சற்று கவனமாகவே பேச வேண்டும்.
ஈர மனசுக்காரர்கள்
மீன ராசிக்காரர்களுக்கு மேஷம், கடகம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் இவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்களிடம் மீனராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆபத்து காலத்தில் ஓடோடி சென்று உதவுவார்கள் மீன ராசிக்காரர்கள்.. இப்படி உதவியை பெற்றுக் கொண்டவர்கள் நன்றி மறந்தாலும்கூட, மீண்டும் ஆபத்து என்றால் உதவுவார்கள்.. மொத்தத்தில் பிறரது சுக துக்கங்களை, தன்னுடைய சுக துக்கமாக ஏற்றுக் கொள்வார்கள். இளகிய குணமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் மீனராசியினர்.
புஷ்பராகம் கோமேதகம் இவர்களது ராசியான கல்.. திங்கள், வியாழக்கிழமையில் சத்யநாராயணன் பூஜை செய்வது நல்லது.. வியாழக்கிழமை விரதம் இருந்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
-
Vinayagar Agaval Lyrics in Tamil: விநாயகர் அகவல் வரிகள்: தமிழ் பக்தி இலக்கியத்தின் முக்கிய படைப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications