2026ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
வாஷிங்டன்: 2026ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒளியை கொண்டு மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் 'ஆப்டோஜெனடிக்ஸ்' மற்றும் 'லைட்-கேட்டட் அயன் சேனல்கள்' குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
விஞ்ஞானிகள் கார்ல் டைசெரோத் பீட்டர் ஹெகமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகிய மூவருக்கும் இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்டோஜெனடிகக்ஸ் என்றால் என்ன?
இது ஒளியியல் மற்றும் மரபியல் ஆகிய இரண்டையும் இணைக்கும் ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும். இதன் மூலம், மூளையிலுள்ள குறிப்பிட்ட நரம்பு செல்களை ஒளியின் உதவியுடன் மிகத் துல்லியமாக ஆன் செல்லது ஆஃப் செய்ய முடியும். இதென்ன லைட் சுவிட்டா? ஆன், ஆஃப் செய்ய? இப்படி செய்வதால் என்ன பலன் என்று பலரும் கேட்கலாம்.
மருத்துவ உலகை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. உதாரணமாக பார்கின்சன், வலிப்பு போன்ற நரம்பியல் நோய்களை குணப்படுத்த நாம் மாத்திரைகளைதான் இப்போது வரை நம்பிக்கொண்டிருகிறோம். ஆனால், இதில் பெரிய மைனஸ் பாயிண்ட் இருக்கிறது. அதாவது மாத்திரைகள் நன்றாக இருக்கும் நரம்பு செல்களையும் பாதித்து.. பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே இந்த பிரச்சனையை சரிசெய்யதான், மேலே சொன்னதை போல நரம்பு செல்களை ஒளியின் உதவியுடன் மிகத் துல்லியமாக ஆன் செல்லது ஆஃப் செய்யும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதற்காகத்தான் தற்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
