பெண்கள் மீது கை வைத்தால் செத்தோம் என்ற பயம் குற்றவாளிகளுக்கு வர வேண்டும்! உச்ச நீதிமன்றம் கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இரவு 10 மணிக்குக்கூட பெண்கள் எந்த அச்சமும் இல்லாமல் சாலையில் நடந்து செல்லும் அளவுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை கூறியது. மேலும், மெட்ரோ ரயிலில் பயணிப்பது, சாலையில் செல்வது என பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லி- என்சிஆர் பகுதியில் சமீப காலங்களாக அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது. அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Supreme Court on Woman safety Supreme Court Woman safety

மேலும், உத்தரவுகள் வெறும் பேப்பரில் மட்டும் இருக்கக்கூடாது எனவும் அவை களத்தில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் 5 முக்கிய கருத்துகளை குறிப்பிட்டனர். அது தொடர்பாக நாம் பார்க்கலாம்!

1 குற்றவாளிகளுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்!

குற்றம் செய்தால் அதற்கு விளைவகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற அச்சம் குற்றம் செய்யக்கூடியவர்களின் மனதில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. குற்றம் செய்தால் உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எண்ணம் குற்றவாளிகளிடம் ஏற்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

நீதிபதி பார்டிவாலா மேலும், "நபர் ஒருவருக்கு குற்றம் செய்யும் எண்ணம் இருந்தால், அவரது மனதில் பயத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு ரவுடியின் மனதில் 'இப்போது ஏதாவது தவறு செய்தால் நாம் காலி' என்ற அச்சம் ஏற்படுத்தப்படாவிட்டால், அதைத் தடுக்க முடியாது" என்று நீதிபதி பார்டிவாலா தெரிவித்தார்.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, ஏதேனும் சம்பவம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அமைப்பு உள்ளதா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. "இந்தியா போன்ற நாட்டில் உத்தரவுகள் பேப்பரில் மட்டும் இருந்தால் போதாது.. கடுமையாக இருக்க வேண்டிய சூழலில் தயங்கக்கூடாது. அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவு குறித்து சிலர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், பாலியல் வன்கொடுமை இல்லாத நிலையை உருவாக்குவதே எங்களது நோக்கம்" என்றனர்.


2. இரவு 10 மணிக்கும் பாதுகாப்பாக உணர வேண்டும்

பெண்கள் உண்மையில் எப்போதும் பாதுகாப்பாக உணர்கிறார்களா என்பதே டெல்லியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான அளவுகோல் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், "டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஒவ்வொரு பெண்ணும் இரவு 10 மணிக்கு நடக்கும்போதும், மெட்ரோவில் பயணிக்கும்போதும் அல்லது சாலையில் செல்லும்போதும் பாதுகாப்பாக இருப்பதாக உணருவதை உறுதி செய்ய வேண்டும்| என்று நீதிமன்றம் தெரிவித்தது.

குற்றங்கள் அதிகம் நடைபெறும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது போதாது என்பதையே இந்த கருத்து வெளிப்படுத்துகிறது. சாலைகளில் நடப்பது, பொது போக்குவரத்தை பயன்படுத்துவது என அன்றாடப் பயணங்களிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக இருந்தது.

3. அம்மா, தங்கைகள்

நீதிபதிகள் மேலும், "பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒவ்வொரு பெண்ணும் சிறுமியையும் சமூகத்தில் ஏதோ ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்... அம்மா, தங்கைகள் தான். பெண்களை அனைவரும் சொந்த குடும்பத்தை சேர்ந்தவராக பார்க்க வேண்டும்" என்றனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் நிறைவேற்றுகிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

4. களத்தில் வேலை செய்ய வேண்டும்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் வெறுமன பேப்பரில் இருந்தால் போதாது என்ற நீதிபதிகள், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்றனர். மேலும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

5. மக்களை தொடர்பு கொள்ளுங்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக அதிகாரிகள் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். குற்றங்கள் குறித்து வெறுமன ஆவணங்களை பார்த்து முடிவெடுப்பதற்கு பதிலாக.. நேரடியாக அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்துகளைக் கேட்க வேண்டியது அவசியம் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+