பீரோவில் கண்ணாடி வைக்கலாமா? திருஷ்டியை நீக்கி அதிர்ஷ்டம் தரும் நெல்லி விதைகள்.. மிளகு பரிகாரம் செம
சென்னை: எப்போதுமே கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. எப்பேர்ப்பட்ட காரியத்தையும் தடை செய்யக்கூடிய சக்தி, கண் திருஷ்டிகளுக்கு இருக்கிறதாம். எனவேதான், கண்திருஷ்டி முதல் துஷ்ட சக்தி, தீய சக்தி என எதுவுமே குடும்பத்தை நெருங்காமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு எளிய பரிகாரங்கள் பல உதவுகின்றன. இதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
வீட்டிலோ அல்லது நபருக்கோ திருஷ்டி பட்டுவிட்டதா? என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.. குறிப்பாக, திருஷ்டி இருந்தால், உடலில் அசதியும், சோம்பலும், ஒருவித மந்த நிலைமையும், காணப்படும். எதுவொன்றையும் செய்ய முடியாது.. புது டிரஸ் அணிந்தால் அது கிழியக்கூடும் அல்லது கறை பட்டுவிடும்.

கண் திருஷ்டி இன்னல்கள்
தம்பதிக்குள் காரணமேயில்லாமல் சண்டை வரும்.. வீட்டில் யாராவது ஒருவர் மாற்றி மாற்றி உடல்நிலை பாதிக்கப்படும்.. நல்ல காரியம் நடப்பதில் சிரமம் ஏற்படும். கையிலுள்ள பணம் செலவாகி கொண்டேயிருக்கும்.. சாப்பிட பிடிக்காது, நிம்மதியான தூக்கமும் இருக்காது.. கெட்ட கனவுகள் நிறைய வரும்..
இந்த திருஷ்டிகளை கழித்தாலே, வீட்டிற்குள் அதிர்ஷ்டமும் எதிர்மறை தாக்கமும் அதிகரிக்கும் என்பார்கள்.. இதற்கு முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டில் சரியாக பயன்படுத்த வேண்டும். சிலர் தூங்கி எழுந்ததும் கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள், இது தவறான செயலாகும்.
கண்ணாடியை எங்கே வைக்கலாம்
சிலர் திருஷ்டிக்காக நிலைவாசலில் கண்ணாடி மாட்டி வைத்திருப்பார்கள். சிலருக்கு இது பொருந்தாமலும் போகலாம். எனவே, கூடுமானவரை முகம் பார்க்கும் கண்ணாடியை பூஜையறையில் வைக்கலாம், இதனால், குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும். கண்ணாடி பிரதிபலிக்கும் தன்மையை கொண்ட இந்த கண்ணாடியை, பணம், நகை இருக்கும் இடத்தில் வைக்கலாம்.
பீரோ, பணப்பெட்டிகளில் வைக்கலாம்.. பீரோவில் வைப்பதாக இருந்தால், கண்ணாடியை உள்பக்கமாக திருப்பி வைக்க வேண்டும். இந்த கண்ணாடிக்கும் அடிக்கடி தூபம் காட்ட வேண்டும்.
நெல்லி விதைகள்
அதேபோல, 6 நெல்லிக்காயை வைத்து பரிகாரம் செய்யலாம். ஆறு நெல்லிக்காய்களிலுள்ள சதையை எடுத்துவிட்டு, வெறும் விதைகளை மட்டும் வெயிலில் நன்றாக காயவிட வேண்டும்.
பிறகு ஒரு வெள்ளையான மெல்லிய துணியில், விதைகளை கொட்டி முடிச்சு போட்டு, வீட்டின் வட கிழக்கு திசையில் வைத்துவிடலாம்.. இதனால், உங்களது கடன் தொல்லை நீங்கும்.., தடைபட்ட வருமானமும் தடையின்றி வரும்.. இந்த விதைகளை வருடத்துக்கு ஒருமுறை மாற்றி கொண்டேயிருக்க வேண்டும். பழைய விதைகளை ஓடும் நீரில் அல்லது மனிதர்கள் பயன்படுத்தாத இடத்தில் வீசிவிடலாம்.
கருமிளகு தரும் நன்மை
அதேபோல, உள்ளங்கையில் ஒரு கைப்பிடி கல் உப்பும், 5 கருமிளகுகளை வைத்து, திருஷ்டி உள்ளவர்களுக்கு தலையை 3 சுற்று வலது புறமாக சுற்ற வேண்டும். பின்னர் குடும்பத்தில் உள்ள அனைவரையுமே நடுவீட்டில் நிற்க வைத்து சுற்ற வேண்டும்..
பிறகு, வாசலில் வீட்டின் பார்த்து 3 முறை சுற்றி, கையிலுள்ள உப்பு, மிளகை தேங்காய் சிரட்டையில் வைத்து மொத்தமாக நெருப்பில் எரித்துவிட வேண்டும்,
இப்படி வாரம் ஒருமுறை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 7 மணிக்கு மேல் செய்தால் போதும். இந்த திருஷ்டியை சுற்றும்போது, திருஷ்டி, கெட்ட சக்திகள், கடன் பிரச்சனைகள் நீங்கி, வருமானம் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications