திருச்செந்தூர் கடலில் நடந்த அதிசயம்.. ஒருமுறை திருச்செந்தூர் மண்ணை தொட்டாலே போதும்.. காணும் விநோதம்
சென்னை: தீராத கடன் தொல்லையா? வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமா? திருச்செந்தூர் மண்ணை தொட்டாலே போதும் என்கிறார்கள்.. அப்படியென்ன சிறப்பு திருச்செந்தூரில்?
கடந்த 2004ம் ஆண்டு உலகை தாக்கிய சுனாமியை மறந்திருக்க முடியாது.. தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள் அத்தனையும் சின்னாபின்னமாயின. ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கின.. லட்சக்கணக்கான உயிர்கள் கடலில் மூழ்கின.

அந்தவகையில், கடலையொட்டி இருக்கின்ற திருச்செந்தூர் முருகன் கோவிலை மட்டும் சுனாமியால் நெருங்க முடியவில்லை... எல்லா இடங்களிலும் கடல் அலை சீறிக்கொண்டு, நிலத்தை நோக்கி வந்தது.. ஆனால் திருச்செந்தூரில் மட்டும் கடல் 200 மீ தூரத்திற்கு உள்வாங்கி சென்றது.
ஆன்மீகவாதிகள்: திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிச் சென்றதன் காரணத்தை ஆன்மீகவாதிகள் பூரித்து சொல்கிறார்கள்.. அத்துடன், திருச்செந்தூர் திருப்புகழில் இடம்பெற்ற பாடல் வரிகளையே உதாரணமாக தருகிறார்கள்
மலை மாவு சிந்த அலை வேலை யஞ்ச
வடிவேலெ றிந்த - அதி தீரா
அறிவாலறிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் - களைவோனே
அழகான செம்பொன் மயில் மேல மர்ந்து
அலைவாயு கந்தப் பெருமானே
அதாவது, சூரபத்மன் மலை போன்ற மாமரமாகக் கடலுக்கடியில் மறைகிறான்... அப்போது முருகப்பெருமான், கடல்நீர் பயந்து பதுங்கி ஓடும் படியாக வடிவேலை எறிந்து, மாமரமாக இருக்கும் சூரனை இரு கூராக்கி, சேவலாகவும் மயிலாகவும் மாற்றினார் என்பது இந்த பாடடிலின் பொருளாகும். முருகனுக்கு பயந்து கடல் அலைகள் பயந்து பதுங்கி நின்றன என்று பக்தர்கள் பூரிக்கிறார்கள். இதனாலேயே திருச்செந்தூர் முருகனைக் கடல் காத்த கந்தன் என்றும் இப்போது அழைக்க துவங்கியிருக்கிறார்கள்.
அதிசயம்: இந்த அதிசயம் வாய்ந்த திருச்செந்தூருக்கு சென்றுவரும்போது, வாழ்வில் ஏற்றும் பெறும் என்கிறார்கள்.. கடன் பிரச்சனை தீர, தொழிலில் முன்னேற, வருமானம் அதிகரிக்க, இழந்த செல்வங்களை மீண்டும் மீட்டெடுக்க, திருச்செந்தூர் முருகப் பெருமானை நாடிச்சென்றாலே அத்தனை இன்னலும் விலகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அந்தவகையில், கடன் தீர வேண்டுமானால், திருச்செந்தூர் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா? 27 செவ்வாய்க்கிழமைகள், காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
செவ்வாய்க்கிழமை: முதலில், வீட்டு பூஜை அறையில் திருச்செந்தூர் முருகனின் உருவப்படத்தை வைக்க வேண்டும். இதற்கு செவ்வரளிப்பூக்கள் அவசியமாகும்.. உங்களை கையாலேயே இந்த பூக்களை கட்டி செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு மாலையாக போட வேண்டும். ஒரு மண் அகல் விளக்கில் நெய்திபம் ஏற்றி ஓம் சரவணபவ மந்திரத்தை 108 முறை சொல்லி கடன் தீர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
விடாமல் 27 செவ்வாய்க்கிழமையும் இந்த வழிபாட்டை செய்யும்போது, கடன்கள் அத்தனையும் விலகி செல்லும்.. ஒருவேளை, பெண்களால் சிலசமயம் இந்த வழிபாட்டை செய்ய முடியாமல் போனால், குடும்பத்தில் வேறு யாரையாவது வைத்து வழிபாடு செய்துவிட வேண்டும்..
முருகப்பெருமான்: திருச்செந்தூருக்கே சென்று அங்குள்ள முருகப்பெருமானை வணங்குவது அபார சிறப்பளிக்கும்.. அதேபோல, திருஆவினன்குடியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடுவதாலும் கடன் தொல்லைகள் நீங்கும். எதையுமே நம்பிக்கையோடு செய்யும்போது, அதன் பலன்களும் இரட்டிப்பாகும் என்கிறார்கள் முன்னோர்கள்.












Click it and Unblock the Notifications