Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூஜை ரூமில் இது வைத்தாலே பணக்கஷ்டம்! வில்லங்கம் வந்துருமே.. பூஜையறையில் பாசிட்டிவ் எனர்ஜிக்கு டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூஜையறையை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு வீட்டின் சந்தோஷமும், ஆரோக்கியமும், செல்வமும் பெருகும் என்பார்கள்.. எனவேதான் , பூஜை அறையில் சில பொருட்களை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும், சில பொருட்களை கட்டாயம் வைக்கக்கூடாது என்றும் வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது.. அவைகள் என்னென்ன தெரியுமா?

பூஜைக்குரிய அகல் விளக்கு, ஊதுவத்தி போன்றவை எல்லாம் பூஜை செய்பவரின் வலது பக்கத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

Sprituality Pooja room puja rooms

பூஜை செய்யும்போது, இரும்பு பொருட்களை தவிர்க்க வேண்டும். யமனுக்கு உரிய உலோகம் இரும்பு ஆகும்.. அத்துடன் நேர்மறை சக்திகளை கிரகித்து கொள்ளும் சக்தி இரும்புக்கு கிடையாது என்பதால், வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜை சாமான்களை உபயோகிக்கலாம்.

பூஜையறை பொருட்கள்

பூஜையறையில் அதிக பொருட்களை பயன்படுத்தக்கூடாது.. பூஜைக்கு அவசியமானவற்றை விளக்குகள் , பூஜை பாத்திரங்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இதனால் எளிதாக சுத்தப்படுத்தவும் முடியும்.. இது நேர்மறை ஆற்றலையும் பெருக்கும்.

எப்போதுமே பூஜை செய்யும்போது, ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் வைத்து கொள்ள வேண்டும்.. ஒருநாள் முழுவதும் பூஜையில் வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அந்த தண்ணீரை வீட்டை சுற்றிலும் தெளித்து விடலாம். இதனால் தீய ஆற்றல்கள் வீட்டை நெருங்காது..

கண்ணாடியை பூஜையறையில் வைப்பதாக இருந்தால், பூஜையின்போது, அதற்கும் தீபாராதனை செய்ய வேண்டும். அதேபோல, பஞ்ச பாத்திரத்தை வெறுமனே வைக்காமல், தண்ணீர் நிரப்பி சிறிது துளசி அல்லது பூக்களை போட்டு வைக்கலாம்..

பிள்ளையார் - அரிசி கிண்ணம்

ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி, பருப்பு போன்ற பொருட்களையும் நிரப்பி சாமி படங்களுக்கு முன்பு வைக்கலாம்.. இதில் பிள்ளையாரின் பாதத்திற்கு அருகில், அரிசியை வைக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை அண்டாமல் இருக்கும். பூஜை பொருட்கள், அதே அறையில்தான் இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும், படுக்கையறையிலேயே பூஜையறை இருக்கும் வீடுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல, படுக்கையறையில் கடவுள் போட்டோக்களையும் வைத்திருக்க கூடாது.

உடைந்த பொருட்கள்

பூஜை அறையில், உடைந்த பொருட்களை பயன்படுத்த கூடாது.. முக்கியமாக, கடவுளின் சிலைகள், கடவுளின் படங்கள் உடைந்து போனால், அல்லது அவைகள் மங்கலாகிவிட்டால், அவற்றை பூஜையறையில் வைக்கக்கூடாது.. சிலர் பழைய காலண்டர்களையும் பூஜையறையிலேயே வைத்திருப்பார்கள்.

எனவே, இவைகளை எல்லாம் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்திற்கு அடியில் அல்லது கோயில்களுக்கு அருகில் கொண்டுபோய் போடலாம்.. காரணம், மேற்கண்டவைகளை உபயோகிக்கும்போது, எதிர்மறை சக்திகள் வீட்டுக்குள் அதிகமாகிவிடுமாம்.

குபேரன் சில்லறை வழிபாடு

பூஜை அறையில் மண் விளக்கை வைத்து அதில் 1 ரூபாய் நாணயம் , 2 ஏலக்காய் சேர்த்து அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு மஞ்சள் நல்லெண்ணெய் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.. குபேரருக்கு நைவேத்தியமாக இனிப்பு பொருட்கள் அல்லது பழம் வைத்து வைத்து வழிபட்டு வரலாம்.

பூஜையறையில் வெண்கல தட்டில் குபேரன் படம் அல்லது குபேரன் சிலையை வைத்து, அதில், சில்லறை நாணயங்களை போட்டு வைக்கலாம்.. குபேர நேரத்தில்,தாமரை திரியில் நெய் விளக்கேற்றி வழிபட்டுவிட்டு, தட்டிலுள்ள சில்லறை நாணயங்களை 2 கைகளாலும் அள்ளி, எடுத்து, மறுபடியும் இதே தட்டில் ஒலி வரும்படியாக போட வேண்டும். நாணய சத்தம் குபேரனுக்கு பிடித்தமானது என்பதால் இவ்வாறு செய்ய சொல்வார்கள். இதனால் பணப்பிரச்னையும் குறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+