வைகுண்ட ஏகாதசிக்கு டிசம்பர் மாதம் திருப்பதிக்கு போக பிளானா? போக முடியாதே!
திருப்பதி: டிசம்பர் மாதத்தில் வைகுண்ட ஏகாதசியில் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா, அப்படியென்றால் உங்கள் பிளான் நிறைவேறாது. என்ன இது அபசகுணமாக சொல்கிறார்கள் என நினைக்காதீங்க, விஷயம் இருக்கு.
திருப்பதிக்கு உலகமெங்கும் வாழும் இந்திய மக்கள் வந்து செல்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். திருப்பதிக்கு உள்ளூர், வெளிமாநில மக்களும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.

அதிலும் தற்போது பிரம்மோற்சவம் நடைபெற போகிறது. புரட்டாசி மாதமும் பிறந்துவிட்டது. எனவே இந்த முறை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதிக்கு முன்பு போல் நினைத்தால் எல்லாம் போக முடியாது.
பெருமாள் அழைத்தால்தான் என்று ஒன்று இருக்கிறது. அதை தாண்டி தற்போது 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும். தர்ம தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. தர்ம தரிசனத்திற்கு கூண்டிற்கு அடைந்து கிடக்க விரும்பாவிட்டால் , அதற்கான இலவச டிக்கெட்டை வாங்கிக் கொண்டால் அந்த நேரத்தில் சென்றால் போதும்.
புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை இதன் பிறகு பிறக்கும் மார்கழி மாதமும் முக்கியமானது. மார்கழியில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் ஒலிக்கும். மேலும் மார்கழியில் வைகுண்ட வாசல் திறக்கும். இதனால்தான் மார்கழியில் இறந்தால் நேராக வைகுண்டத்தை அடையலாம் என்கிறார்கள்.
இந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும். இதை காண பக்தர்கள் குவிவார்கள். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் உள்ளிட்டவைகளில் இந்த விழா கோலாகலமாக நடைபெறும்.
அந்த வகையில் திருப்பதியில் இந்த விழாவை பற்றி கேட்க வேண்டுமா என்ன? திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 10 நாட்களும் சொர்க்க வாசல் திறந்திருக்கும். இதை காண லட்சோப லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவர்.
அந்த வகையில் டிசம்பர் மாதம் திருப்பதி செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நாளில் டிசம்பர் மாதம் திருப்பதிச் செல்ல புக் செய்து கொள்ளலாம். ஆனால் வைகுண்ட ஏகாதசிக்கு செல்ல நினைத்தால் டிசம்பர் மாதம் புக் செய்ய முடியாது.
ஏனென்றால் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10 ஆம் தேதி வருகிறது. எனவே அக்டோபர் 24 ஆம் தேதிதான் வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். கடந்த முறை ஒரே ஆண்டில் இரு முறை வைகுண்ட ஏகாதசி வந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் வைணவர்கள் தாம் வழிபடும் பெருமாளின் கதவுகள் திறக்கும் என நம்புகிறார்கள். இதற்காக முன்னிரவு உறங்காமல் விழித்துக் கொண்டு திருமாலின் புகழ் பாடி கோயிலுக்கு செல்வர். விடியற்காலையில் பெருமாள் கோயில்களில் பொதுவாக வடக்கு திசையில் உள்ள கதவு மூடப்பட்டிருக்கும்.
இந்த கதவு ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும். இந்த வாசல் வழியாக சென்று இறைவனை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது முராசுரனை பெருமாள் வீழ்த்தியது வைகுண்ட வாயில் திறக்கும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications