புனுகின் பாசிட்டிவ் எனர்ஜி.. புனுகுப் பூனையிலிருந்து பெறப்படும் புனுகின் அற்புத நன்மை, மகிழ்ச்சியும்
சென்னை: வீட்டிலுள்ள பணக்கஷ்டம் தீர்ந்து, நிதி நிலைமை சீராக வேண்டுமானால், அதற்கு எளிய பரிகாரம் உள்ளன.. அதேபோல, எதிர்மறை எண்ணங்கள் அத்தனையும் விலகி, குடும்பத்தில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க வேண்டுமானால், அதற்கு கை கொடுக்கக்கூடியவை புனுகு. இதன் பயன்பாடுகள், முக்கியத்துவம் என்ன? சுருக்கமாக பார்ப்போம்.
வாசனை திரவியங்களில் ஒன்றாக கருதப்படும் புனுகு, புனுகு பூனையிடமிருந்து பெறப்படுகிறது.. இந்த வகை பூனைகள் சாம்பல் நிறத்தில், அடர்த்தியான வாலுடன், புள்ளி புள்ளி தோற்றத்தை கொண்டிருக்கும். ஆப்ரிக்காவில் அதிகம் காணப்பட்டாலும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வகை பூனைகள் உள்ளன.

இது காட்டு விலங்கை சேர்ந்தது என்பதால், வீட்டில் வளர்க்க முடியாது.. அப்படியே வளர்த்தாலும் அரசின் அனுமதி வேண்டும்.. இந்த வகை பூனைகளின் உடம்பிலிருந்து சுரக்கும் திரவத்திலிருந்தும், கழிவிலிருந்தும் புனுகு தயாரிக்கப்படுகிறது.
நறுமணம்: புனுகின் மணம், கஸ்தூரியின் வாசத்தை போலவே இருக்கும்.. சித்த வைத்தியத்தில் புனுகுகள் மருந்தாக பயன்படுகின்றன.. சுவாச பாதிப்பு, உடலில் கட்டிகள், சிரங்கு, பருக்கள், தழும்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.. நிறைய அழகு சாதனங்களிலும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல, புனுகை பயன்படுத்தி, ஊதுவத்திகள் எண்ணெய், மூலிகை மருந்துகள் தயாரிக்கிறார்கள். புனுகு, கஸ்தூரி, சந்தனம் இந்த மூன்றையும் நீரில் கலந்து குளித்து வந்தால், உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறும்.. முகப்பருக்கள் இருந்தால், இரவு தூங்க போவதற்கு முன்பு, புனுகை பருக்கள், தழும்புகள் உள்ள இடங்களில் தடவிவரலாம். புனுகு எண்ணெய்யும் பயன்படுத்தினால் சருமத்துக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
பாசிட்டிவ் எனர்ஜி: ஆன்மீகத்திலும் புனுகுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றன.. பாஸிட்டிவ் எனர்ஜியை தரக்கூடிய பொருளாக இந்த புனுகுகள் பார்க்கப்படுகின்றன.. திருஷ்டி கழிக்க வேண்டுமானால், புனுகினை சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.
அதேபோல, வீட்டில் பூஜையறையில் இதை வைப்பதால், வாசனைகள் நிரம்பியிருக்கு.. இதை கொண்டுதான், கோவிலில் சிலைகளுக்கும் அபிஷேகம் செய்ய பயன்படுகின்றது. அதிலும், புனுகுடன் சேர்ந்து ஜவ்வாது பயன்படுத்துவதால், கோயில் முழுக்க தெய்வீகம் நிறைந்திருக்கும் என்பார்கள். இறைசக்திகளை ஈர்க்கும் இடமாக மாற்றும் தன்மை இந்த புனுகுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
வீண் செலவுகள்: வீட்டில் செலவுகள் அதிகமாகிவிட்டால் அல்லது வீண் செலவு வந்து கொண்டேயிருந்தால், புனுகுடன், கல் உப்பு, கிராம்பு, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் போன்ற வாசனை பொருட்களை எல்லாம், ஒரு மஞ்சள் நிற பையில் போட்டு வைத்து கொள்ள வேண்டும். உங்களது பணத்தை இந்த நறுமணம் மிக்க இந்த மஞ்சள் நிற பையில் போட்டு வந்தாலே, வீண் செலவுகள் உடனே குறையும்.
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு, வெள்ளிக்கிழமைகளில், செய்யப்படும் அபிஷேகத்தில், புனுகு எண்ணை முக்கியமானதாகும். அதேபோல, வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபிறகு பிரசாதமாக இந்த புனுகு எண்ணெய் வழங்கப்படுகிறது.. தீராத வியாதிகளையும் இந்த எண்ணெய் தீர்ப்பதாக பக்தர்கள் சிலிர்த்து கூறுவது நினைவுகூரத்தக்கது.
கடன் தொல்லை: அதேபோல, கடன் தொல்லை தீர்ந்து, பணக்கஷ்டம் நீங்க வேண்டுமானால், 48 நாள் புனுகு, பச்சரிசி பரிகாரம் செய்யலாம்.. வெள்ளிக்கிழமை, பெளர்ணமி வரும் நாட்கள் அல்லது பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்கள், சதுர்த்தி நாட்களில், பிரம்மமுகூர்த்தத்தில் இந்த பரிகாரம் செய்யலாம்.
இதற்கு 1 ரூபாய் நாணயங்கள் 11 எடுத்துக்கொண்டு, அதில் புனுகை தடவ வேண்டும். பிறகு, மஞ்சள் அல்லது சிவப்பு நிற பருத்தி துணியில், புனுகு தடவிய நாணயங்கள், ஏலக்காய், ஜாதிக்காய் போட்டு, அனைத்தையும் முடிச்சாக கட்டி, ஒரு பாத்திரத்தில் வைத்துவிட வேண்டும்.
பச்சரிசி பரிகாரம்: இந்த பாத்திரத்தின் மீது பச்சரியை கொட்டி மூடிவிட வேண்டும்... குடும்பத்தில் அதிக சம்பளம் பெறும் நபர்கள் தூங்கும் இடத்தில் இதனை வைத்து விட்டு, 48 நாட்களுக்கு தொடாமல் இருக்க வேண்டும். 48 நாட்கள் கழித்து, பாத்திரத்திலுள்ள ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை தண்ணீரில் விட்டுவிட வேண்டும். பச்சரிசியினை எறும்புகளுக்கு தந்துவிடலாம். இதனால், பணக்கஷ்டம் நீங்கி, பணம் பெருக துவங்கும் என்பது நம்பிக்கையாகும்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications