புத்தர் சிலையின் ஸ்பெஷாலிட்டி.. புத்தரின் சுவர் ஓவியம் வைக்கலாமா? வீட்டில் மகிழ்ச்சிக்கான சிலைகள்
சென்னை: வீடுகளில் புத்தர் சிலைகளை வைக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் புத்தர் நிறங்கள் என்னென்ன? மருந்து புத்தர் சிலை என்றால் என்ன? சுவர் ஓவியத்தில் புத்தர் வரையலாமா?
அமைதி, கருணை, நல்லொழுக்கம், நல்லெண்ணத்தின் அடையாளமாகவே புத்தர் சிலைகள் பார்க்கப்படுகின்றன. புத்தரின் சிலையை வீட்டில் வைத்தாலே அமைதி, செழிப்பு உண்டாகும்.

அதைவிட முக்கியமாக புத்தரின் முகத்தில் ஆன்மீக சக்தியை நேரடியாகவே அனுபவிக்க முடியும். காரணம், புத்தர் சிலையை பார்க்கும்போது நம்முடைய மனதிலும் நல்லெண்ணமும் கருணையும் ஏற்படும். அமைதி முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு தியானம் செய்தால், நம்முடைய மனமும் அமைதிப்பெறும்.
சிலைகள் திசைகள்: புத்தர் சிலைகளில் பலவகை உள்ளன.. ஒவ்வொரு புத்தர் சிலையை பற்றியும், அதன் பலன்கள் பற்றியும், அதன் திசைகள் பற்றியும் வாஸ்துவில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. அதேபோல, புத்தர் சிலைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? எப்படி வீடுகளில் வைத்திருக்க வேண்டும்? என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, புத்தர் சிலையை ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே வைக்கக்கூடாது. படுக்கை அறையில், சிறிய மரச்சாமான்களில் வைக்கக்கூடாது.. ஃபிரிட்ஜ் உட்பட மின்சாத பொருட்கள் மீது வைக்கக்கூடாது.. பெரிய சாதனங்களுக்கு பக்கத்தில் வைக்கக்கூடாது. அப்படி வைக்கும்போது, பெரிய பொருள்கள் நேர்மறை அதிர்வுகளை தடுத்துவிடும். சமையலறை, கழிவறை அருகில் வைக்கக்கூடாது. ஸ்டோர்ரூம், வாஷிங் ரூம்களில் வைக்கக்கூடாது. தரையிலும் வைக்கக்கூடாது. தரையிலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் வைக்கப்பட வேண்டும்.
எப்படி வைக்க வேண்டும்: நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடியதாக கருதப்படும் புத்தர் சிலைகள், எப்போதுமே இருப்பிடம், அதன் மதிப்பை அதிகரிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். வெளிச்சம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும். புத்தர் சிலை வைக்கும் இடம் எப்போதும் சுத்தமாகவே இருக்க வேண்டும். புத்தர் சிலையை சுத்தமான மேஜை மீதோ அல்லது அலமாரியிலோ வைக்கலாம்.. குழந்தைகள் படிக்கும் அறையில் வைக்கலாம்.
புத்தர் சிலைகளை வீட்டில் வைக்க விரும்புவோர் கண்டிப்பாக வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறங்களில் தான் வைக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் புத்தர் சிலையால் வரும் பலன்கள் சரியாக வந்து சேராமல் இருக்கும். அதேபோல, மங்களகரமாக கருதப்படும் புத்தர் சிலையை வெறுமையாக வைக்காமல், அதன் பக்கத்திலேயே ஏதாவதொரு பித்தளை, அல்லது பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில், சில பூக்களையும் போட்டு வைக்கலாம்.
புத்தர் மருத்துவம்: ஆரோக்கியம் தரக்கூடியதாக புத்தர் மருந்து சிலைகள் பார்க்கப்படுகின்றன.. இந்த சிலையின் வலது கை கீழ்நோக்கியும், விரல்கள் தரையை நோக்கியும், உள்ளங்கை வெளியேயும், இடது கையில் மூலிகைகளின் கிண்ணமும் காணப்படும். வலது கை புத்தரை ஆசிர்வதிப்பதாகும்.
புத்தர் மருத்துவம் என்பது மனதையும், உடலையும் குணப்படுத்துவது மற்றும் சிகிச்சை ஆற்றல்களை உருவாக்குவதாகும். பல மருந்து புத்தர்கள் நீல நிறத்திலேயே காணப்படும்.. இந்த சிலைகளை வைத்திருப்பதால், உடல்நலக்குறைவுகளிலிருந்து மீண்டு, ஆசீர்வாதங்களை பெறலாம்..
புத்தர் சுவர் ஓவியம்: புத்தர் சுவர் ஓவியமும், நல்ல ஆற்றலையும் செழிப்பையும் ஈர்க்கக்கூடியவை.. எனவே, வீட்டின் பிரதான நுழைவாயில், இருக்கலாம்.. வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவை புத்தர் ஓவியங்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த திசைகள் வாஸ்து சாஸ்திரத்தின்படி மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இது மனதிற்கு மனநிறைவையும் பெற்று தருகிறது. எதிர்மறை ஆற்றல்களையும் வீட்டிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்துகிறது இந்த புத்தர் சுவர் ஓவியம்...!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications