பீரோவில் இதை மட்டும் வைக்காதீங்க.. தங்க நகை, பணம் அதிகமாக சேரணுமா? பீரோவுக்குள் இந்த பொருள் வையுங்க
சென்னை: வாஸ்து முறைகளை முறையாக பின்பற்றி சரியான திசையில் பீரோவை வைக்கும்போது, பணம் மற்றும் நகை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.. அந்தவகையில், பீரோவை எந்த திசையில் வைக்கலாம், பீரோவில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன? பீரோவில் பணம் சேர பரிகாரம் ஏதாவது உள்ளதா?
வாஸ்து முறைப்படி 8 திசைகள் இருந்தாலும், பீரோவை வைப்பதற்கான சரியான திசை தென்மேற்கு ஆகும்.. தென்மேற்கு திசையில் பீரோ இருந்தால், நேர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும்.

நேர்மறை ஆற்றல்
பீரோக்குள் வைக்கும் பணப்பெட்டி அல்லது நகைப்பெட்டியை, எந்த திசையிலும் வைக்கலாம். ஆனால், தெற்கு திசையில் மட்டும் வைக்கக்கூடாது.. அதேபோல, முடிந்தவரை, குபேரனுக்கு உரிய திசையான, வடக்கு திசையை பார்த்து வைப்பது மிகவும் நல்லது என்பார்கள்.
பீரோவில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், எதை எதை வைக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.. அந்தவகையில், நீண்ட காலம் பயன்படுத்தாமல் சேதமடைந்து அல்லது முற்றிலுமே பயன்படுத்தாமல் வீணாகி கிடக்கும் பொருட்களை உடனே அப்புறப்படுதத வேண்டும்.. இந்த பொருட்கள் பீரோவில் இருந்தால் எதிர்மறை ஆற்றலை அதிகமாக்கிவிடுமாம்.
என்னென்ன வைக்கக்கூடாது
அதேபோல, துவைக்காத துணிகளையும், வியர்வை வாசனையுள்ள துணிகளையும் பீரோவில் வைக்கக்கூடாது. இதுவும் வீட்டில் எதிர்மறை அதிர்வுகளை உருவாக்கும். கூர்மையான பொருட்கள் குறிப்பாக, கத்திரிக்கோல், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வீட்டு பீரோவில் வைக்கக்கூடாது. உடைந்த பொருட்களை வைக்கக்கூடாது.. அதிலும் உடைந்து கண்ணாடி பொருளை வைக்கவே கூடாது.. சீப்புகளை பீரோவில் வைக்கக்கூடாது.. முக்கியமாக தலைமுடியை சரிசெய்ய உதவும் சீப்பை வைக்கக்கூடாது.
பணவரவு பீரோவில் தங்குதடையின்றி கிடைக்க, பச்சை கற்பூரத்தை ஒரு சிறிய துணியில் வைத்து கட்டி பீரோவில் வைக்கலாம்.. அல்லது பச்சை கற்பூரத்தை வெள்ளிக்கிழமைகளில் தண்ணீரில் கலந்து வீட்டில் தெளித்து வருவதாலும் வீட்டிலுள்ள எதிர்மறை அதிர்வுகளை போக்கலாம்.
கொண்டைக்கடலை, பச்சரிசி
பச்சரிசி, வெள்ளை கொண்டைக் கடலை, துவரம் பருப்பு இந்த மூன்றையும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து, பூஜையறையில் வைத்து நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பின்னர், ஒரு பச்சை நிற துணியில் இந்த தானியங்களை சேர்த்து, சிறிய மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூடிச்சினை பீரோவில் வைத்துவிட்டால் போதும்.. வார வாரம் வீட்டிற்கு சாம்பிராணி காட்டிவர வேண்டும்.
3 மாதம் கழித்து, இந்த மூட்டையிலுள்ள தானியங்களை ஓடும் நீரில் அல்லது கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, பிறகு இன்னொரு துணியில் இந்த தானியங்களை கலந்து எடுத்து, பீரோவில் அதே இடத்தில் வைத்து வழிபட்டு வர வேண்டும். இப்படி செய்து வருவதால் கடன் தொல்லை, நிதி நெருக்கடி, நிலப்பிரச்சனை அனைத்தும் தீரும்...
நகைப்பெட்டி, பணப்பெட்டி
அதேபோல, ஒரு வெந்தயம், பச்சை பயிறு, பச்சை கற்பூரம் இந்த மூன்றையும் கலந்து பூஜையறையில் வைத்து, மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு, இந்த மூன்றையும், நல்ல நேரம் பார்த்து, பீரோவில் பணம் வைக்குமிடத்தில் அல்லது பணப்பெட்டி, நகைப்பெட்டியில் தூவிவிட வேண்டும். 3 வாரம் கழித்து இந்த பொருட்களையும் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் அதேபோன்ற 3 பொருட்களை கலந்து வைக்க வேண்டும். இதனாலும், பணம் தங்குதடையின்றி வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications