கங்கா ஸ்நானம்.. தீபாவளிக்கு நல்லெண்ணெய்.. உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து குளிக்க நல்ல நேரம்
சென்னை: விடுமுறை நாள் என்பதால் தீபாவளி நாளில் மெதுவாக எழுந்து எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். தீபாவளி நாளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம் உள்ளது சூரிய உதயத்திற்கு முன்பாகவே நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
எண்ணெய் குளியல்: தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும், பலகாரமும் முதலிடம் பிடிக்கும். கிராமப்புறங்களில் அசைவ உணவு களைகட்டும் இவை அனைத்துக்கும் முன்பாக உடம்பில் சூடு போக நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது பாரம்பரியமான ஒன்றாகும். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். நவம்பர் 12 ஆம் தேதியன்று தீபாவளி நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

தீபாவளி மரபு: நம்முடைய நாட்டில் தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. வனவாசம் முடிந்து ராமர் நாட்டிற்கு திரும்பிய நாள் தீபாவளி என்று கூறுகின்றனர். அந்த நாளில் தீபங்களை ஏற்றி ராமர், சீதை லட்சுமணருக்கு வரவேற்பு அளித்தனர். இன்றைக்கும் அயோத்தியில் தீபாவளி நாளில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி வழிபடுவது மரபாக உள்ளது. அதே போல மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரத்தில் நரகாசூரனை வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடுகின்றனர். மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எண்ணெய் தேய்த்து குளித்து புது ஆடைகள் அணிவது போல தீபாவளி நாளில் இன்றைக்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
நல்லெண்ணெய்: தீபாவளி நாளில் தலையில், உடம்பில் தேய்க்கும் நல்லெண்ணெயை காய்ச்சுவதே ஒரு கலை அதற்கு தேவையான பொருட்களை முதல்நாளே சேகரித்து வைத்து விடுவார்கள். நல்லெண்ணெய் காய்ச்சுவதற்காக ஒரு வாணலியை தயார் செய்து வைத்து விடுவார்கள். அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்து வானலியில் நல்லெண்ணெ ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே சின்ன வெங்காயம், காய்ந்த சிறிதளவு மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைப்பார்கள்.
வெந்நீர் குளியல்: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரிசையாக அமர்ந்து ஒரு கின்னத்தில் எண்ணெய் ஊற்றி உடம்பில் தேய்த்து ஊறவைத்து வெந்நீரை காய்ச்சி அதில் சிறிதளவு சந்தனம், மஞ்சள் போட்டு குளிப்பது பாரம்பரியம். வெந்நீரில் சந்தனம், மஞ்சள் தூள் போடுவதால் அந்த நீரில் கங்கை எழுந்தருளுவதாக ஐதீகம்.
குளிர குளிர குளியல்: எண்ணெயில் பூண்டு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து பதமான சூட்டில் இதமாக காய்ச்ச வேண்டும்.வெது வெதுப்பான நல்லெண்ணெயை உச்சந்தலையில் முதலில் வைக்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்து விட்டு உள்ளாங்கால்களில் கடைசியாக தேய்க்க வேண்டும். அரைமணிநேரம் ஊற வைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு கலப்படம் எதுவும் இல்லாத அரப்பு, சீயக்காய்தான் பயன்படுத்த வேண்டும். குளித்து முடித்து விட்டு புத்தாடை அணிந்து இறைவனை வணங்கி விட்டு சாப்பிட வேண்டும்.
உடல் சூடு குறையும்: இன்றைக்கு பித்தமும் உடல் சூடும் அதிகரித்து இருக்கிறது. நல்லெண்ணெய் குளியல் பித்தம், உடல் சூட்டை தணிக்கிறது. தோல் வறட்சி நீங்கும். ரத்த ஒட்டம் சீராக இருக்கும். எண்ணெய் குளியல் மன அழுத்தத்தை நீக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. எனவேதான் வாரம் இருமுறை தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.
நன்மைகள்: சனி நீராடு என்பது பெரியவர்கள் கூறும் முது மொழி. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியம். பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்கும். பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் இளநரை வராது. சளி, தலைவலி, சைனஸ் தொந்தரவு நீங்கும். ஆரோக்கியமான தூக்கம் கிடைக்கும்.
மறந்தும் சாப்பிடாதீர்கள்: தீபாவளி மட்டுமல்லது பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் ஓய்வு எடுப்பது அவசியம். குளிர்ச்சியான
தயிர், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை தவிர்ப்பது நல்லது. இன்றைய பரபரப்பான காலத்தில் இளைய தலைமுறையினர் எண்ணெய் குளியலை மறந்தே விட்டனர். வீக் என்ட் கலாச்சாரத்தில் உள்ளவர்கள் தீபாவளி நாளிலாவது தியேட்டர்களில் போய் அமர்ந்து கொள்ளாமல் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications