மாத சம்பளம் பத்தலையா? உங்க கடன் தொல்லை தீரலையா? அப்ப துவரம் பருப்பு போதுமே.. எளிமையான பரிகாரம்
சென்னை: கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லைகள் உங்களுக்கு இருக்கிறதா? இதோ இந்த முருக வழிபாட்டினை மனமுருகி செய்யும்போது, அதிலிருந்து எளிதில் விடுபடலாம் என்கிறார்கள் பெரியவர்கள்.
பெரும்பாலும் கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிம்மதி என்பதே இருக்காது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகரும்.. சொல்ல முடியாத அளவுக்கு மனஉளைச்சலுக்கும் ஆளாவார்கள்.

இப்படி குழப்பத்திலும், சிக்கல்களிலும் இருப்பவர்கள், பெருமாள் கோவிலுக்கு சென்று சனிக்கிழமை, புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வரவேண்டும்... இதுபோல் 12 வாரமும் துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்து வந்தால், கடன் பிரச்சனைக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்பார்கள்.
கடன் தொல்லை: அதேபோல, கடன் பிரச்சனை என்றாலே அதிலிருந்து விடுபட, வணங்க வேண்டிய தெய்வம் முருகப்பெருமான் தான். எந்த நல்ல காரியத்தையும் செவ்வாய்க்கிழமைகளில் ஆரம்பிக்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால், முருகப்பெருமானுக்குரிய கிழமை செவ்வாய் ஆகும்..
ஆனால், கழுத்தை நெரிக்கும் கடன் தீர வேண்டுமானால், செவ்வாய்கிழமையில் ஒரு சிறு தொகையையாவது திருப்பி தந்துவிட வேண்டும். இப்படியொரு முயற்சியை எடுக்கும்போது, படிப்படிப்படியாக முழு கடனையும் அடைக்ககூடிய சாத்தியக்கூறுகள் வந்து சேரும்.
அதேபோல, மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளில் முருகனை வழிபடும்போது, "ஓம் தத் புருசாய வித்மஹே - மகேஷ்வர புத்ராய தீமஹி - தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.
பருப்பு: இந்த வழிபாட்டின்போது, முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, அகல் விளக்கில் நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.. துயரங்களை போக்கக்கூடியது துவரை என்பதால், துவரம் பருப்பையும் வாங்கி முருகனின் படத்திற்கு முன்பு வைத்து வழிபட்டு வரவேண்டும்.. அத்துடன் சந்தனம், சுக்கு, சிவப்பு நிறத்தால் ஆன துணியை வாங்கி வைக்கலாம்..
மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப் பெருமானின் இந்த பொருட்களை வாங்கி வைத்து வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள்.
பரிகாரம்: அதேபோல, கடன் தொல்லை தீர்ந்து, பணவரவு தாராளமாக வரவேண்டுமானால் எளிய பரிகாரம் ஒன்றையும் செய்யலாம்.... இந்த பரிகாரத்தை பெளர்ணமி நாளன்று இரவு 8.00 மணிக்குமேல் அல்லது பிர்மமுகுர்த்த நேரத்தில் செய்யலாம்.
இதற்கு 1 கண்ணாடி டம்ளரில் தண்ணீரை நிரப்பி கொள்ள வேண்டும்.. அதில், 1 ரூபாய் நாணயங்கள் 3 போட வேண்டும்.. பிறகு இந்த டம்ளரை உங்களது இடது கையில் வைத்து அதன் மேற்புறத்தில் வைத்து, பெளர்ணமி வெளிச்சம் படரும் இடத்தில் அமர்ந்து மனமார பிராத்தனை செய்ய வேண்டும்.
நம்பிக்கை: பின்னர் அந்த டம்ளரை இரவு முழுவதும் பெளர்ணமி வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டு மறுநாள் காலையில் , அதிலிருக்கும் நாணயங்களை பீரோ அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். பிறகு அந்த தண்ணீரிலிருந்து தினமும் ஒரு டீஸ்பூன் குடித்து வந்தால் கடன் பிரச்சனைகள் மெல்ல விலகுமாம்.. நம்பிக்கையுடன் இதை செய்யும்போது, விரைவில் குடும்பத்தில் சுபீட்சம் தழைக்கும் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications