வாசற்படியில் பச்சை மிளகாய், எலுமிச்சை கட்டுவது ஏன் தெரியுமா? இப்படி தான் கட்டி தொங்க விடணுமாம்.. பலே
சென்னை: வீட்டு வாசற்படியிலேயே பச்சை மிளகாயை கட்டி வைப்பது ஏன் தெரியுமா? இதற்கு ஆன்மீக காரணம் மட்டுமல்ல, அறிவியல் காரணங்களும் நிறையவே இருக்கின்றன.
பெரும்பாலான இந்துக்கள் வீடுகளின் வாசலில் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக, வாசலில் மிளகாய், எலுமிச்சம் போன்றவற்றை கட்டி வைத்திருப்பார்கள்..

கண் திருஷ்டி: பொறாமை பிடித்தவர்கள், கெடுதல் நினைப்பவர்கள், போன்றோரின் துஷ்ட பார்வையிலிருந்து தப்பிப்பதற்காகவே இப்படி எலுமிச்சையையும், மிளகாயையும் கட்டி வைப்பார்கள். இதில் பச்சை மிளகாய்களை போலவே, காய்ந்த மிளகாயையும் கட்டி வைத்திருப்பார்கள். அதாவது, எலுமிச்சை, காய்ந்த மிளகாய், கரி இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து கட்டிவிடுவார்கள்.
எதிர்மறை தன்மைகளை ஈர்க்கும் சக்தி, எலுமிச்சைக்கும், மிளகாய்களுக்கு நிறையவே உண்டு.. அதுமட்டுமல்ல, மகாலட்சுமியின் சகோதரி அலட்சுமி என்னும் மூதேவி, வறட்சியை தரக்கூடியவள்.. செல்வத்தை அளவில்லாமல் தரக்கூடியவள் லட்சுமி என்றால், வீட்டிலுள்ள செல்வ, செழிப்பை பறித்து சென்றுவிடுபவள் அலட்சுமி என்பார்கள்.
இந்த அலட்சுமிக்கு புளிப்பு, காரம், நெருப்பு என்றால் மிகவும் பிடிக்குமாம்.. அதனால்தான், வீட்டு வாசலில் கரி, மிளகாய், எலுமிச்சை என 3 விதமான பொருட்களை கட்டி தொங்கவிட்டால், அதை வாசற்படியிலேயே நின்று சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் அப்படியே திரும்பி சென்றுவிடுவாளாம் அலட்சுமி.
என்ன நூல்: இதற்கான நூல் என்ன? எப்படி இந்த பொருட்களை அதில் கோர்க்க வேண்டும்? எப்போது இவைகளை வாசற்படியில் மாட்டி விட வேண்டும் என்பது குறித்தும் விலாவரியாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எப்போதுமே, சிகப்பு அல்லது கருப்பு கயிற்றில்தான் இவைகளை கட்டிவிட வேண்டுமாம். அதுவும், இந்த திருஷ்டி எலுமிச்சை, மிளகாயை வாரம் ஒரு முறை அதாவது வெள்ளிக்கிழமையில் காலை வேளையில் மாற்றிவிட வேண்டுமாம்..
செழிப்புகள்: பச்சை மிளகாய்களை ஒற்றைப்படையில் 7 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் ஒரு முனை அந்தப்பக்கமும் ஒரு முனை இந்த பக்கமும் பார்க்கும்படி கட்டிவிட வேண்டும். வாரம் ஒரு முறை இவைகளை மாற்றி கொண்டேயிருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும்போது, குடும்பத்தில் எப்போதும் கண் திருஷ்டி, வறுமை நீங்கி, மகிழ்ச்சியும், செழிப்புமாக காணப்படும் என்பார்கள்.
ஆன்மீக காரணங்கள் இவ்வாறு இருந்தாலும், இதற்கு அறிவியல் காரணங்களும் உள்ளன.. எலுமிச்சை, பச்சைமிளகாய் இரண்டுமே வைட்டமின் C சத்துக்கள் அதிகம் நிறைந்தவை.. இரண்டுமே பூச்சிகளை கொல்லும் தன்மையை கொண்டவை.
கொசுக்கள்: இந்த எலுமிச்சை, மிளகாயிலிருந்து வெளிப்படும் வாசமானது, எந்தவிதமான விஷப்பூச்சிகளையும், கிருமிகள், தொற்றுகளையும் வீட்டுக்குள் நெருங்க விடாது.. இதனால், கொசுக்களும், ஈக்களும் வீட்டிற்குள் வராமல் தடுக்கப்படும். இதனால் தொற்று நோயிலிருந்தும் வீட்டிலுள்ளவர்களை காக்க முடியும்.
இந்த பருத்தி நூலில் இந்த எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டி கோர்க்கும்போது, எலுமிச்சையின் சாறு, நூலின் வழியாக மெல்ல இறங்கி மிளகாயுடன் சேர்ந்து ஆவியாகிவிடும்.. இது காற்றில் கலக்கும்போது, ஆரோக்கியமான சுவாசத்தை நம்மால் பெற முடியும்.. இது நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications