108.. இந்த நம்பருக்கு மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்? ஆம்புலன்ஸை "108" என ஏன் சொல்றோம் தெரியுமா? ஓஹோ
சென்னை: இந்து மதங்களில் 108 எண் மட்டும் ஏன் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது தெரியுமா? ஆம்புலன்ஸ்களுக்கு ஏன் 108 நம்பர் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?
108 எண்ணானது, இந்து மதத்தில் புனிதமான எண்ணாக போற்றப்படுகிறது.. பெரும்பாலானோர் கோயில்களில் கடவுளை வேண்டிக் கொள்ளும்போது, 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக் கொள்வார்கள். தேங்காய் மட்டுமல்ல, மந்திரங்களையும் 108 முறை ஜெபிப்பார்கள்...

வேதங்கள்: 4 வேதங்களையும் கூட்டினால் 108 வேதங்களில் அடங்கும். 108 உபநிடதங்கள் உள்ளது போலவே, வைணவர்களின் மூல திருத்தலங்களின் எண்ணிக்கை 108 திவ்ய பிரபந்தங்களாக விளங்குகின்றன. இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படும் நாமங்களும் 108 ஆகும். 4 திசைகளிலும் உள்ள 27 நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் 108 ஆகும்.. 12 ராசிகள் 9 கோள்களை சேர்க்கும் போதும் 108 எண் வருகிறது.
மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சை வெளியிடுகிறான்.. அதாவது 1 மணிநேரத்திற்கு 900 முறை என்றால், ஒரு நாளைக்கு 21, 600 முறையாகும்.. இதனை இரவு பகலுக்கும் பாதியாக பிரித்தால் 10,800 வருகிறது. அதேபோல, நம்முடைய உடலில் 108 உயிர் புள்ளிகள் இருப்பதாக வர்மக்கலை கூறுகிறது.
ரத்த அழுத்தம்: சராசரியாக, நம்முடைய உடலானது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியது.. 108 டிகிரி பாரன்ஹீட் இருந்தால்தான், நம்முடைய உடலிலுள்ள செல்களும் உயிரோடு இருக்குமாம். இந்த அளவு தாண்டும்போது, செல்கள் இறந்துவிடும்.. அதேபோல, ரத்த அழுத்தம் என்று சொல்லக்கூடிய BP அளவீடும் 108 என்றே கணக்கிடப்படுகிறது. இதனை உணர்த்தும் நோக்கிலும் 108 எண் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள்.
சூரியனின் விட்டம், பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம். பூமியிலிருந்து நிலவின் தூரம் 238,800 மைல்கள். இது நிலவின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.
பூஜ்ஜியம்: அதேபோல, மாயைக்குரிய எண்ணாக 8 கருதப்படுகிறது.. இந்த மாயையிலிருந்து நம்மை மீட்கும் இறைவன் ஒரே ஒருவன்தான். இந்த 8 மற்றும் 1 என்ற சக்திகளுடன், எதுவுமே இல்லாமல் பூஜ்யமாக நாம் இருக்கிறோம். 108 என்ற எண் முக்கியத்துவத்துக்கு இப்படியும் காரணம் சொல்லப்படுகிறது.
சீக்கிய மதம், புத்த மதத்தில் பயன்படுத்தும் ஜெப மாலைகளின் எண்ணிக்கையும் 108 ஆகும். புத்தர்கள் முக்தி அடைவதற்கு 108 படிகளை தாண்டியே செல்ல வேண்டும்.. ஜப்பானில் ஷிண்டே சமயத்தில் புத்தாண்டு கொண்டாடப்படும் போது 108 முறை மணியை அடிப்பார்களாம்.. இதனால் மனிதர்களின் பாவம் நீங்குகிறது என்பது நம்பிக்கை. எனவே, 108 எண்ணில் அதிக ஆற்றல்கள் இருப்பதாக இம்மதங்கள் வலுவாக நம்புகின்றன.
ஆம்புலன்ஸ்: மனித வாழ்வில் இத்தனை முக்கியத்துவம் 108-க்கு இருப்பதால்தானோ, ஆம்புலன்ஸ்களுக்கு 108 என பெயர் வைத்ததாக கூறுகிறார்கள். ஆனால், இதற்கு இன்னொரு அறிவியல் காரணமும் உள்ளது. எப்போதுமே நம்முடைய கண்கள் முதலில் 1 நம்பரைத்தான் கவனிக்குமாம்.. அடுத்ததாக பூஜ்யத்தை கவனிக்குமாம்.. பிறகு 8ம் நம்பரை எளிதில் கவனிக்குமாம். அதனால் 108 என்ற எண்ணை, அவசரமான பதற்றம் நிறைந்த நேரத்திலும் எளிதில் டயல் செய்துவிடலாம்.












Click it and Unblock the Notifications