இந்த 3 ராசிக்காரர்களை தவிர வேறு யாரும் காலில் கருப்பு நிற கயிறை கட்டக் கூடாது தெரியுமா?
சென்னை: இந்த 3 ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது நல்லது என்கிறது சாஸ்திரம். அவர்கள் தவிர்த்து மற்றவர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதை தவிர்த்துவிடலாம். திருஷ்டிக்காக கட்டப்படும் இந்த கருப்பு கயிற்றை யாரெல்லாம் கட்டலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பகல் 12 மணி அளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தனியாக சென்றால் கருப்பு பொட்டு வைக்க வேண்டும் என நம் மூதாதையர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது போல் கருப்பு கயிறு கட்டினால் காத்து கருப்பு அண்டாது என்பதம் ஐதீகம்.

கழுத்திலோ, கைகளிலோ கறுப்பு கயிறு கட்டுவதை விட கால்களில் கறுப்பு கயிறு கட்டி விடுவார்கள். சிலருக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கறுப்பில் கட்டி விடுவார்கள். அதெல்லாம் சாஸ்திர சம்பிரதாயத்திற்காக செய்யப்பட்டது. பெண்கள் கொலுசு, மெட்டி அணிவதை கட்டாயமாக்கினர் நம் முன்னோர்கள்.
குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும், தாய்க்கும் கருப்பு கயிறு கட்டப்படும். குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க, அவர்கள் கன்னத்தில் கருப்பு புள்ளி அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக்கினர்.
கறுப்பசாமி கோவில், காளியம்மன் கோவிலுக்கு சென்று பூசாரி கையால் மந்திரித்து கறுப்பு கயிறு கட்டினார்கள். இந்தக் கயிறு கட்டப்பட்ட கையிலோ, காலிலோ வேறு எந்த நிறக் கயிறும் கட்டக்கூடாது என்ற விதி உள்ளது. இன்றைக்கு இளைஞர்களும் இளம் பெண்களும் கால்களில் கறுப்பு கயிறு கட்டுவதை பேஷனாக செய்து வருகின்றனர்.
இந்த கறுப்பு கயிறு எல்லாம் கட்டலாமா? கறுப்பு கயிறு எல்லோருக்கும் நல்ல பலன்களைத் தருமா என்று பார்க்கலாம். கறுப்பு கயிறு கட்டும்போது சனிபகவானை வேண்டிக்கொண்டு காலில் கருப்பு கயிறு கட்டினால் கண்திருஷ்டி படாது. ஜோதிட சாஸ்திரத்தின்படி காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் ராகு, கேது, சனி ஆகிய மூன்று கிரகங்களின் பலன்கள் கிடைக்கும்.
இந்த கிரகங்கள் வலிமை குறைந்து இருந்தால் அது வலிமையடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.
சனி பகவான் சன்னதியிலோ அல்லது சிவ ஆலயங்களுக்கோ சென்று சாமி கும்பிட்டு விட்டு சாமியின் பாதத்தில் கறுப்பு கயிறு வைத்து வழிபாடு செய்து இந்த கருப்பு கயிறு கட்டுவது நல்லது. சனிக்கிழமை அன்று வேண்டிக்கொண்டு கையில் கட்டினால் சனி பகவானின் ஆசிகள் கிடைக்கும்.
சனி பகவான் முதலில் ஒருவரது கால்களைத்தான் பிடிப்பார். எனவேதான் கால்களை சரியாக கழுவ வேண்டும் என்பார்கள். அது போல் கருப்பு கயிறை காலில் கட்டுவதன் மூலம் சனி தோஷம் நீங்கும். அத்துடன் ராகு, கேது பாதிப்புகளும் ஏற்படாது. கருப்பு கயிறு கட்டியதும் சனி பகவானின் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.
அந்த கருப்பு கயிற்றில் 9 முடிச்சுகள் போட வேண்டும். கருப்பு கயிற்றை பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் அணியலாம். சிலருக்கு கருப்பு ஆகாவிட்டால் சிகப்பு கயிறும் கட்டுகிறார்கள். இந்த கயிறுகளால் எதிர்மறை ஆற்றல் இல்லாமல் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி மகரம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த கருப்பு கயிற்றை கட்டலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications